ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அமீருக்கு ராக்கி கட்ட போறேன் - ஷாக் கொடுத்த பாவனி.. வைரலாகும் வீடியோ!

அமீருக்கு ராக்கி கட்ட போறேன் - ஷாக் கொடுத்த பாவனி.. வைரலாகும் வீடியோ!

Pavani Reddy

Pavani Reddy

BB Jodigal 2 | பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி-யின் பிரபல ஆங்க்கரான பிரியங்கா தேஷ்பாண்டே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஸ்டார் விஜய் டிவி-யில் ஏராளமான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், கடந்த 5 வருடமாக விஜய் டிவி-யில் மட்டுமல்ல, சின்னத்திரையிலே மெகாஹிட் ரியாலிட்டி ஷோவாக இருந்து கொண்டிருப்பது பிக்பாஸ் தான்.

பிக்பாஸ் ஷாவின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், பிக்பாஸ் சீசனில் ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து இதன் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்டிமேட் ஷோவும் வழக்கமான ட்விஸ்ட்கள் மற்றும் களேபரங்களுடன் நடந்து முடிந்தது. பிக்பாஸ் பங்கேற்பாளர்களை வைத்து நடத்தப்படும் மற்றொரு ரியாலிட்டி ஷோ (டான்ஸ் ஷோ), பிக்பாஸ் ஜோடிகள்.

பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்ற போட்டியாளர்களையும் கொண்டு துவங்கியுள்ள இந்த டான்ஸ் ஷோவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி-யின் பிரபல ஆங்க்கரான பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்று இருந்தார். இதனிடையே பிரியங்கா எடுத்துள்ள வீடியோவில் டைட்டில் வின்னரான ராஜுவுடன் ஹோஸ்டிங் செய்வதாகவும், பிக்பாஸ் வீட்டில் கொடுத்த அதே ஆதரவு தற்போதும் வழங்குமாறு கேட்டு கொண்டார்.

பின்னர் அங்கு வரும் பாடகர் வேல்முருகன் தான் இசைவாணியுடன் டான்ஸ் ஆட உளளதாக தெரிவிக்கிறார். பிபி ஜோடிகள் ஷோவில் முதல் முதலில் டான்ஸ் ஆட போவதால் சற்று நடுக்கமாக இருப்பதாகவும், ஆனால் சமாளித்து நன்றாக ஆடிவிட முடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அடுத்து ஆர்த்தி மற்றும் கணேஷ் பேசுகிறார்கள். ராஜு பாய் முதல் முறை ஆங்கரிங் செய்ய போவதை காண ஆவலாக இருப்பதாக கூறும் ஆர்த்தி, மாஸ் & தெறிக்க விட போறோம் என்கிறார்.

Also Read : நடிகைகள் மீதான அவதூறு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி கோபமடைந்த பயில்வான் ரங்கநாதன்

ஆர்த்தியை தொடர்ந்து தாமரை மற்றும் அபிஷேக் பேசுகிறார்கள். இதற்கு அடுத்த தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஜோடிகளான பாவனி மற்றும் அமீர் இருவரும் பேசுகிறார்கள். நீங்கள் பிக்பாஸ் ரசிகர் என்றால் இவர்களின் கெமிஸ்ட்ரி பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தெரியாதவர்களுக்கு, பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்ற சீரியல் நடிகை பாவனிக்கும் - டான்ஸ் மாஸ்டர் அமீருக்கும் இடையே நடைபெற்ற சிறுசிறு கூடல்கள் இவர்கள் இருவரையும் தற்போது வரை காதலர்களாக ரசிகர்களை பார்க்க வைத்துள்ளது. எனினும் காதலிப்பதாக இதுவரை வெளிப்படையாக இருவரும் அறிவிக்கவில்லை.

' isDesktop="true" id="743092" youtubeid="Z3NdNinmZYQ" category="entertainment">

இந்நிலையில் அவர்களிடம் சென்ற பிரியங்கா, என்ன எதிர்பார்ப்பில் இருக்கீங்க ரெண்டு பேரும். பிபி ஜோடிகள் முடியும் போது கல்யாணம் பண்ணிட்டு போக போறிங்களா, என்கேஜ்மென்ட்டா, இல்ல பிரேக்அப்பா என்று வேடிக்கையாக கேட்க உடனே பாவனி சிரித்து கொண்டே 'ராக்கி' கட்டிவிட போறேன் என்று அமீரை பார்த்து கூறுகிறார்.

Also Read : இவருடன் டேட்டிங் செல்வது மிகவும் கடினம்... யாரை சொல்கிறார் பிரியா பவானி சங்கர்?

உடனே பிரியங்கா என்னது ராக்கி கட்ட போறியா? மவளே வெளிய போ என்று ,கூறிய உடனே மீண்டும் சிரித்து கொண்டே ஃபிரெண்ட்ஷிப் பேண்ட் கட்ட போறேன் என்கிறார். உங்கள் இவரிடமிருந்து மக்கள் நல்ல டான்ஸ், ஃபன், லவ் என நிறைய எதிர்பார்ப்பதாக கூறிவிட்டு செல்கிறார் பிரியங்கா. இந்த வீடியோ ஷோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Amir, Bigg Boss Tamil, Pavani Reddy, Vijay tv