ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகைகள் மீதான அவதூறு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி கோபமடைந்த பயில்வான் ரங்கநாதன்

நடிகைகள் மீதான அவதூறு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி கோபமடைந்த பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

நடிகைகள் குறித்து கடந்த சில மாதங்களாக அவதூறாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நடிகைகள் குறித்து கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசி வருவதாக கூறப்படும் நிலையில் அவர் மீது தற்போது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் நடிகைகளிடம் பிளாக்மெயில் செய்து பணம் வாங்கியதாக நிரூபித்துவிட்டால் தொழிலை விட்டுச் செல்கிறேன்  தான் கூறும் கருத்துக்கள் காவல்துறையினருக்கு அதிகம் பிடிக்கும் எனவும் பல காவலர்கள் கூறியுள்ளதாக ரங்கநாதன் தெரிவித்தார்.

மேலும்  தன்னை தாக்க வந்தால் அரிவாளால் வீசுவேன் தான் தூத்துக்குடிக்காரன், கோழை அல்ல. சினிமாவில் ஒழுக்கமாக வாழ்பவர்களின் நானும் ஒருத்தன். யூட்யூப் மூலம் பலரை சந்தோஷப்படுத்துவதால் மில்லியன் கணக்கான மக்கள் தன்னை பின்பற்றுகின்றனர். தயாரிப்பாளர் கே ராஜன் யூடியூபில் பேசுவதை சில நூறு பேர்கள் மட்டுமே கேட்பதால், அந்தக் காழ்ப்புணர்ச்சியில் தன்னைப் பற்றி அவதூறாக பேசி உள்ளார். தான் யூ டியூபில்  நடிகர் நடிகைகள் பற்றி பேசுவதில் உண்மை தன்மை இருப்பதால், யூட்யூப் வீடியோக்களில்  தனக்கு ஆதரவாக கமெண்டுகள் வருவதால் தொடர்ந்து இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் திணறியபடி பதிலளித்தார். தான் நடிகைகளைப் பற்றி பேசுவது குறித்து சம்பந்தப்பட்ட நடிகைகள் புகார் அளிப்பதில்லை. நடிகை ஓவியாவைப் பற்றி அவர் கூறிய கருத்தை மட்டுமே தான் வீடியோவாக கருத்து பதிவிட்டு வெளியிட்டுள்ளேன். நடிகை ஓவியாவை பற்றி பேசுவது என் விருப்பம். யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக 25% நடிகர் நடிகைகளின் அந்தரங்க விவகாரங்களை தலைப்பாக வைக்கின்றனர்.

Also Read : பாட்ஷா வசூலை முறியடித்த இந்தியன் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு!

தன்மீது தெரிவிக்கப்பட்ட அவதூறு குறித்து நிரூபிக்க முடியுமா என தெரிவித்த பயில்வான் ரங்கநாதனிடம் மற்றவர்களைப் பற்றி அவதூறாக பேசுவது சரியா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.செய்தியாளர்கள் கேள்வி கேட்பதற்கு பதில் அளிக்க முடியாமல் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பதாக  பதிலளிக்காமல் இருந்தார்.

நான் அருவருக்கத்தக்க வார்த்தைகளை வீடியோவில் பேசியதே இல்லை.  பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் இருப்பது தொடர்பாக பெண்களைப் பற்றி அவதூறாக பேசியது பற்றி பத்திரிகையாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு, பெயர் தெரியாமல்  அறிஞர் கூறுவதாக தெரிவித்து மழுப்புதலாக பதில் அளித்தார். தொடர்ந்து அந்த அறிஞர் கூறிய  கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களன் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

சினிமாவை சீர்திருத்த இது போன்று கருத்துக்களைப் பதிவிட்டு வீடியோக்கள் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று கருத்துக்களை பேசும்போது மக்களுக்கு பிடிப்பதால் அதிகம் வீடியோ வெளியிடுகின்றேன். பத்திரிக்கையாளர் என தெரிவித்துக் கொண்டு ஜாதி ரீதியாகவும் அவதூராக பேசுவது சரியா என பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் வாயடைத்துப் போனார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் புகார் அளிக்கும் இடத்தில் சில பெண் காவலர்கள்  நடிக்க வருவதாக விருப்பம்  தெரிவித்ததாகவும் கூறினார். நடிகைகளே தங்களைப் பற்றிய கிசுகிசுக்களை விளம்பரத்திற்காக பேசச் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்

காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடிகைகள் இருவர் இரட்டை அர்த்தமாக பேசும்போது, நான் வீடியோவில் பேசுவது என்ன தவறு? என பயில்வான் ரங்கநாதன் விளக்கமளித்தார்.

Published by:Vijay R
First published:

Tags: Entertainment