Oscar 2020 | ஒபாமா தம்பதியர் தயாரித்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது..!

Oscar 2020 Winners List | ஒபாமா தம்பதியர் ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ என்னும் ஆவணப்படத்தைத் தயாரித்து கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

Oscar 2020 | ஒபாமா தம்பதியர் தயாரித்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது..!
(Photo: Reuters)
  • News18
  • Last Updated: February 10, 2020, 10:46 AM IST
  • Share this:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா இணைந்து தயாரித்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கரின் சிறந்த ஆவணப்படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒபாமா தம்பதியர் ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ என்னும் ஆவணப்படத்தைத் தயாரித்து கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகணப்பகுதியில் சீன கோடீஸ்வரரால் திறக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையின் கதையாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

(Image: AFP)



ஆவணப்பட இயக்குநர் ஜூலியா ரெய்சர்ட் இரண்டு துணை இயக்குநர்களான ரெய்சர்ட் மற்றும் ஸ்டீவென் போக்னர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலியா கூறுகையில், “உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாளுக்குநாள் தேய்ந்து கொண்டேதான் செல்கிறது. உலக உழைப்பாளர்கள் ஒன்றிணையும் சூழில்தான் இந்த நிலை மாறும்” என்றார்.

ஆஸ்கர் வென்றதற்காக இயக்குநர்களுக்கு பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமா ஆகிய இருவரும் பாராட்டுகளைப் பகிர்ந்துள்ளனர்.

மேலும் பார்க்க: சிரி, அலெக்ஸா-வுக்குப் போட்டியாக அறிமுகமாகிறது கூகுள் மீனா!
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading