ஆரிக்கு எதிராக திட்டமிடும் பாலாஜி.. ரம்யா, ஆஜித்துடன் இணைந்து உருவாகும் புதிய குரூப்

ஆரிக்கு எதிராக திட்டமிடும் பாலாஜி.. ரம்யா, ஆஜித்துடன் இணைந்து உருவாகும் புதிய குரூப்

ஆரிக்கு எதிராக திட்டமிடும் பாலாஜி.. ரம்யா, அஜித்துடன் இணைத்து உருவாகும் புதிய குரூப்

பாலாஜி கோழிப்பண்ணை டாஸ்கில் ஷிவானிக்கு ஆதரவாக விளையாடியதால் கமல் இந்த வாரம் இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களைக் கடந்துள்ளது. கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் டபுள் எவிக்சன் இருந்த நிலையில், நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, ஆரி, சோம், ரியோ, ஷிவானி, ஆஜித், அனிதா ஆகிய 7 பேர் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யமாக இருந்தவர்கள் மற்றும் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறு பிக் பாஸ் அறிவித்ததும், அதில் கேபி மற்றும் ஷிவானி சுவாரஸ்யம் குறைவானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பி வைத்துள்ளது இன்று வெளியான இரண்டு ப்ரமோக்களில் தெரியவந்தது. இதில் ஷிவானியை ஆரி தேர்வு செய்தார். இதனால் பாலாஜி கடுப்பில் இருப்பது இன்று வெளியான மூன்றாவது ப்ரமோவில் தெரிகிறது.அதில் பாலாஜி, ரம்யா, ஆஜித் ஆகியோர் சமையலறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லை என மற்றவர்களைப் பார்த்து ஆரி அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பதாக பாலாஜி கூறுகிறார். "டைட்டில் வின் பண்ணுவதற்கு தகுதி இல்லை என என்னை உட்பட பலரையும் சொல்லி இருக்காரு. இந்த வீட்டில் யாருக்குமே தகுதி இல்லை அவரைத் தவிர. இவருக்கு என்ன தெரியும் எனக்கு தகுதி இருக்கா, இல்லையா எனச் சொல்வதற்கு.." என பாலாஜி காட்டமாக கூறுகிறார்.

Also read: இறுதிக் கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ்.. ஜெயிலுக்குச் சென்ற கேப்ரியல்லா, ஷிவானி..

அப்போது குறுக்கிட்ட ஆஜித், ”70 நாட்களுக்குப் பிறகும் நான் எதிலும் பங்கேற்கவே இல்லையாம். அப்படி இல்லாம தான் ஆடியன்ஸ் என்னை வீட்டுக்குள் வெச்சிருக்காங்க” எனக் கூறுகிறார். இதன் மூலம் சுவாரஸ்யம் குறைவாக இருந்தவர்கள் பட்டியலில் ஆரி, அஜித்தைத் தேர்வு செய்திருப்பது தெரிகிறது. ”அடுத்தவங்க குற்றம் சொல்லி, தான் பெஸ்ட் எனச் சொல்வது தப்பு” என ரம்யாவும் ஆரி குறித்து பேசுவது வீடியோவில் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பேசும் பேசிய பாலாஜி, "சத்தியமா இதுதான் தனித்துவமான கேம் என்றால் நான் க்ரூப் ஆகி விடுகிறேன். நான் குரூப்பிஸமே பண்றேன். என் குரூப்பில் யாரெல்லாம் சேர்கிறீர்களோ சேரலாம்” என வேடிக்கையாக தெரிவித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அர்ச்சனா, ரியோ, சோம், நிஷா, ரமேஷ், கேபி ஆகியோர் ஒரு குழுவாகவும், பாலாஜி, ஷிவானி, ரம்யா, ஆஜித், அனிதா ஆகியோர் ஒரு குழுவாகவும் உள்ளனர். குரூப்பிஸம் குறித்து கமல் கடுமையாக சாடியதாலும், நிஷா, ரமேஷ் வெளியே சென்றதாலும் அர்ச்சனா குழுவினர் இந்த வாரம் தனித்துவமாக தங்களின் திறமைகளைக் காட்டி விளையாடினர்.

ஆரி எப்போதுமே தனித்துவமாக விளையாடுவதால் அவருக்கென ஒரு ரசிகர்கள் பாட்டாளமே உள்ளது. பாலாஜி இந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்கில் ஷிவானிக்கு ஆதரவாக விளையாடியது பல இடங்களில் தெளிவாகவே தெரிந்தது. அதனால் கமல் இந்த வாரம் இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: