Home » News » Entertainment » BALAJI MURUGADOSS SUPPORTS FOR SHERIN TMN

ஷெரினுக்காக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த பாலாஜி முருகதாஸ்..ஏன் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்த பாலாஜி முருகதாஸ் நடிகை ஷெரினுக்காக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷெரினுக்காக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த பாலாஜி முருகதாஸ்..ஏன் தெரியுமா?
ஷெரின் - பாலாஜி முருகதாஸ்
  • Share this:
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் அக்டோபர் 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது.இந்நிகழ்ச்சியில் 100 நாட்களை கடந்து ஆரி, பாலாஜி, சோம், ரம்யா, ரியோ ஆகிய ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.பின்பு ஒருவொருவராக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் மற்றும் சக போட்டியாளர்களும் பார்வையாளராக கலந்துக்கொண்டனர்.

இந்த போட்டியின் வின்னராக அதிக வாக்குகளை பெற்ற ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பாலாஜி முருகதாஸ் தட்டிச் சென்றார்.அப்போது மேடையில் பேசியப் பாலாஜி, என்ன பேசுவதென்று தெரியவில்லை.இந்த கப்பை இரண்டு விதமாக ஜெயிக்கலாம் .நான் ஆடியதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.எவ்வள்வு தவறு செய்தாலும் ,சரி செய்து கொள்ளுதல் எனும் ஒரு இருப்பதால் தான் என்னை இரண்டாவது இடத்தில் நிக்க வைத்திருக்கின்றீர்கள்.

எனக்கு ஒரு விஷயம் சரினு படும், அதை தான் நான் பண்ணிருக்கேன்.அது வெளில எப்படி தெரிஞ்சதுனு தெரியல, நானும் வெளிய போய் பார்த்துட்டு என்ன தப்பி பண்ணிருந்தாலும் சரி செஞ்சிக்கிறேன் என பேசிவிட்டு கடைசியில் நம்புங்க..நம்புங்க..நானும் நல்லவன் தான் என்றுக் கூறி உரையை முடித்துக்கொண்டார்.


இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று ரியோவை அழைத்து வந்தார்.இதனை தொடர்ந்து ஷெரின் பாலாஜியிடம் பேசிய விதம் பிடிக்கவில்லை எனக் கூறி பாலாஜி ரசிகர்கள் ஷெரினை கமெண்ட்டில் திட்டி வருகின்றனர்.



இதனை பார்த்த பாலாஜி, 'என்னுடைய சில ரசிகர்கள் ஷெரினின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் தவறான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றீர்கள்.ஷெரின் என்னுடைய நல்ல தோழி.யாருடைய சமூக வலைதளங்களிலும் தவறான கமெண்ட்களை பதிவிடாதீர்கள்’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ஷெரின் ‘நன்றி டா.நீ உன்னுடைய நாளை கொண்டாடு.இந்த தவறான கமெண்ட்கள் வந்ததற்கு காரணம் உன்மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பினால் தான்.அதுவே எனக்கு சந்தோஷமாக உள்ளது.சில பேர் நட்புடன் பழகுவதை புரிந்துக்கொள்வதில்லை’ என ஷெரீன் பதிவிட்டுள்ளார்
First published: January 18, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories