பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் அக்டோபர் 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 100 நாட்களை கடந்து ஆரி, பாலாஜி, சோம், ரம்யா, ரியோ ஆகிய ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். பின்பு ஒவ்வொருவராக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் மற்றும் சக போட்டியாளர்களும் பார்வையாளராக கலந்துக்கொண்டனர்.
இந்த போட்டியின் வின்னராக அதிக வாக்குகளை பெற்ற ஆரி அர்ஜுனன் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பாலாஜி முருகதாஸ் தட்டிச் சென்றார்.அப்போது மேடையில் பேசியப் பாலாஜி, என்ன பேசுவதென்று தெரியவில்லை.இந்த கப்பை இரண்டு விதமாக ஜெயிக்கலாம் .நான் ஆடியதில் ஏதேனும் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.எவ்வள்வு தவறு செய்தாலும் ,சரி செய்து கொள்ளுதல் எனும் ஒரு இருப்பதால் தான் என்னை இரண்டாவது இடத்தில் நிக்க வைத்திருக்கின்றீர்கள்.
எனக்கு ஒரு விஷயம் சரினு படும், அதை தான் நான் பண்ணிருக்கேன்.அது வெளில எப்படி தெரிஞ்சதுனு தெரியல, நானும் வெளிய போய் பார்த்துட்டு என்ன தப்பி பண்ணிருந்தாலும் சரி செஞ்சிக்கிறேன் என பேசிவிட்டு கடைசியில் நம்புங்க..நம்புங்க..நானும் நல்லவன் தான் என்றுக் கூறி உரையை முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் முதல் பதிவை இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.அதில் ‘இந்த அற்புதமான பயணத்தில் என் கூடவே இருந்து ஊக்குவித்த எனது ரசிகர்களுக்கு நன்றி.உங்களின் நேரம் , அன்பு மற்றும் பாசிடிவ் எனர்ஜி அனைத்திற்கும் நன்றி’எனக் கூறியுள்ளார்.மேலும் அந்த பதிவுடன் ‘எனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப் தான்’ என்ற வாசகம் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.