தள்ளிப்போன தனுஷ் கால்ஷீட்..நேரத்தை வீணாக்காமல் வேறு நடிகரை தேர்ந்தெடுத்த மாரி இயக்குனர்..

தனுஷ் -பாலாஜி மோகன்

தனுஷின் கால்ஷிட் தள்ளிப்போனதால், சித்தார்த்தை வைத்து புதுப்படம் ஒன்றை தொடங்குகிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.

  • Share this:
    தனுஷை வைத்து மாரி, மாரி 2 படங்களை இயக்கிய பாலாஜி மோகன் மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. தனுஷ் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார். அத்துடன் சேகர் கம்முலா இயக்கத்தில் பான் - இந்தியன் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இவை தவிர, ராட்சசன் ராம் குமார், மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கத்திலும் நடிக்கிறார். 

    இந்த பிஸி ஷெட்யூல்ட் காரணமாக பாலாஜி மோகன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இந்த இடைவெளியில் சித்தார்த் நடிப்பில் ஒரு படத்தை பாலாஜி மோகன் இயக்குகிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதற்கு முன் பாலாஜி மோகனின் முதல் படமான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த் நடித்திருந்தார்.

    Photos : டைனிங் டேபில் மேல் அமர்ந்து கவர்ச்சியாக போஸ் கோடுத்த நடிகை அமைரா தஸ்தூர்..

    முதலில் இதனை குறும்படமாக பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். அது சித்தார்த்துக்குப் பிடித்துப்போக, அவரது முயற்சியில் பாலாஜி மோகன் அதே கதையை சற்று விரிவாக எழுதி இயக்கிய படம்தான் காதலில் சொதப்புவது எப்படி

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.விரைவில் படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: