வர்மாவையும் விட்டுவைக்கவில்லையா? ரிலீஸான வேகத்தில் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்..

வர்மாவையும் விட்டுவைக்கவில்லையா? ரிலீஸான வேகத்தில் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்..

வர்மா

ஆதித்யா வர்மா திரைப்படம் திரையரங்கில் வெளியான போதும் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். இந்நிலையில் இன்று பாலா இயக்கிய வர்மா சிம்பிளி சவுத் என்ற ஓடிடி தளத்தில் ரிலீசானது.

 • Share this:
  பாலாவின் இயக்கத்தில் இன்று ஓடிடி தளத்தில் ரிலீசான வர்மா திரைப்படத்தை வெளியான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

  கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார்.

  இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார்.

  ALSO READ |  Big boss 4 | பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன்.. சக போட்டியாளர்களால் மனமுடைந்த ஷிவானி..

  இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

  இதைத்தொடர்ந்து ‘ஆதித்யா வர்மா’ என்ற டைட்டிலில் அர்ஜுன் ரெட்டி படத்தில் பணியாற்றிய இயக்குநர் கிரிசய்யா இயக்கத்தில் மீண்டும் புதிதாக ரீமேக் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

  ஆதித்யா வர்மா திரைப்படம் திரையரங்கில் வெளியான போதும் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். இந்நிலையில் இன்று பாலா இயக்கிய வர்மா சிம்பிளி சவுத் என்ற ஓடிடி தளத்தில் ரிலீசானது.

  ALSO READ |  லடாக்கில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. இன்னும் இந்த வருஷம் என்னெல்லாம் பாக்கணுமோ.. இணையவாசிகள் புலம்பல்..

  இந்நிலையில் தற்போது வர்மா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ரிலீசான உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

   
  Published by:Sankaravadivoo G
  First published: