Home /News /entertainment /

பிக் பாஸ் ஸ்மோக்கிங் ரூமில் நெருக்கமான ஜோடி? சிம்பு சொல்லப்போவது என்ன?

பிக் பாஸ் ஸ்மோக்கிங் ரூமில் நெருக்கமான ஜோடி? சிம்பு சொல்லப்போவது என்ன?

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஒவ்வொரு சீசனிலும் ஒரு சிலர் வேண்டும் என்றே தேவையில்லாத பிரச்சினைகளை மேற்கொள்வார்கள். சர்ச்சைகளை கிளப்பினால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்பதற்காகவே டாஸ்க்குகளும் வழங்கப்படும்.

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு சிலர் வேண்டும் என்றே தேவையில்லாத பிரச்சினைகளை மேற்கொள்வார்கள். சர்ச்சைகளை கிளப்பினால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்பதற்காகவே டாஸ்க்குகளும் வழங்கப்படும்.

  சில நேரங்களில் ஹவுஸ்மேட்ஸ் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் தான் நமக்கு காண்பிக்கப்படும். ஆனால் நிகழ்ச்சி முடிந்து அல்லது நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டு அவர்கள் வெளியேறியவுடன், சண்டை பற்றிய கேள்விகள் வந்தால், கொஞ்ச நேரம் மட்டுமே சண்டை இருந்தது. நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டோம் என்று கூறுவார்கள். இதை பார்க்கும் ரசிகர்களுக்கு எடிட் செய்வதால் இப்படியெல்லாம் நடக்கின்றது நிகழ்ச்சியை முழுவதுமாக காட்டினால் உண்மை என்ன என்று தெரியும் என்று கூறி வந்துள்ளனர்.

  தற்போது பிக்பாஸ் அல்டிமேட் 24/7 ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் விவாதங்கள், சண்டைகள் மற்றும் யாருடன் யார் நட்பு கொள்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் தெரிந்துவிடும். 24 மணிநேரம் நிகழ்ச்சியைக் காட்டினாலும் ஒரு சில இடங்களில் நடக்கும் காட்சிகள் காண்பிக்கப்படுவது இல்லை. அந்த வகையில் ஸ்மோக்கிங் ரூம் காட்சிகளும் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதில்லை.

  இந்நிலையில் ஸ்மோக்கிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக, பஞ்சாயத்து டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸ்கள் இரண்டு குடும்பமாக பிரிந்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வைத்தியரின் குடும்பத்தை சேர்ந்தவராக பாலா மற்றும் அபிராமிக்கு கணவன் மனைவியான பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரியும்... மேடை நாடக நடிகர் ரஜினி தெரியுமா?

  ஒவ்வொரு குடும்பமும் மற்றவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும். புகாரை விசாரித்து, சுரேஷ் சக்கரவர்த்தி பாட்டியாக தீர்ப்பு வழங்குவார். டாஸ்க் இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கப்பட்டவுடன், பாலா மற்றும் அபிராமியை காணவில்லை. அவர்களை தேடிச் சென்ற நிரூப் ஸ்மோகிங் ரூம் அருகில் சென்று உடனே திரும்பி வந்துள்ளார். அந்த நேரத்தில் தான் இவர்கள் இருவரும் நெருக்கமாக ஸ்மோக்கிங் ரூமில் இருந்ததாக நிரூப் தெரிவித்துள்ளார்.

  இது தான் விஜய்யின் சொகுசு பங்களாவா? கவனம் பெறும் புகைப்படம்!

  சில நிமிடங்களிலேயே அபிராமியும் அதைத் தொடர்ந்து பாலாவும் வந்து டாஸ்கில் தொடர்ந்து கலந்து கொண்டனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு பார்வையாளர்கள் பல்வேறு கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்மோக்கிங் ரூமில் கேமரா இருக்கும், தேவைப்பட்டால் மட்டுமே தான் அது காண்பிக்கப்படும் என்று ஒரு தரப்பினரும், ஸ்மோக்கிங் ரூமில் இவர்கள் நெருக்கமாக நடந்துள்ளார்கள் அதனால் தான் அதை காண்பிக்கவில்லை என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

  நிறைமாத கர்ப்பத்திலும் இப்படியா? ரசிகர்களின் பாராட்டு மழையில் ஆல்யா மானசா!

  கடந்த வாரம் மிகச்சிறப்பாக நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். கிட்டத்தட்ட அனைத்து தரப்பினருமே சிம்புவை பாராட்டினர். அது மட்டுமின்றி இந்த ஸ்மோக்கிங் ரூமில் நடந்தது உண்மையா, அந்த வீடியோ ஏன் காண்பிக்கப்படவில்லை அல்லது நிரூப் பொய் சொல்கிறாரா, என்று இந்த சம்பவத்தைப் பற்றி சிம்பு இந்த வார இறுதியில் பேசுவாரா என்று பார்வையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil

  அடுத்த செய்தி