• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நெட்டிசன்களின் செயலால் மனஅழுத்தம் -நடிகை நேஹா மேனன் ஓபன் டாக்

நெட்டிசன்களின் செயலால் மனஅழுத்தம் -நடிகை நேஹா மேனன் ஓபன் டாக்

நடிகை நேகா மேனன்

நடிகை நேகா மேனன்

தற்போது விஜய் டிவி-யின் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமியில், பாக்கியாவின் மகளாக இனியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

  • Share this:
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக டிவி மூலம் அறிமுகமானவர் நடிகை நேஹா மேனன். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாய்மொழி மலையாளம். என்றாலும் இவர் தமிழ் டிவி சீரியலிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். முதல் முதலாக பிள்ளை நிலா சீரியல் மூலம் 2012-ம் ஆண்டு சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நேஹா மேனன். டி.கே.எஸ் நிமேஷ் இயக்கி சன் டிவி-யில் ஒளிபரப்பான இந்த சீரியலில் நிலா என்றார் கேரக்டரில் நடித்தார்.

அதன் பின்னர் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், நிறம்மாறாத பூக்கள், தமிழ் செல்வி உட்பட பல சீரியல்களில் நடித்தார். எனினும் இவர் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானது நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து நடித்த வாணி ராணி சீரியல் மூலம் தான். இந்த சீரியலில் தேனு என்றார் கேரக்டரில் நடித்த நேஹா மேனன் சின்னத்திரை ரசிகர்களை கவர தவறவில்லை. அருண் குமார் ராஜன், விக்னேஷ் குமார், அப்சர், மானஸ் சவாலி மற்றும் குஹான் சண்முகம் போன்ற பிரபல தொலைக்காட்சி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது விஜய் டிவி-யின் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமியில், பாக்கியாவின் மகளாக இனியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் 2015-ல் யட்சன் படத்தில் நடித்தன் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். பின்னர் மூத்த நடிகர் சத்தியராஜுடன் இணைந்து ஜாக்சன் துரை படத்தில் அவரது மகளாக சில காட்சிகளில் நடித்துள்ளார். சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் இதில் நேஹா அருமையாக நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக குட்டியாக அறிமுகமான நேஹா தற்போது உருவமாற்றத்துடன் காணப்படுகிறார்.

இதனால் அவர் பலரின் கேலி மற்றும் கிண்டல்களுக்கு ஆளாகி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நேஹா, தனது ஃபோட்டோ மற்றும் வீடியோக்களளை ஷேர் செய்யும் வழக்கம் உடையவர். ஆனால் சிலர் அதை பார்த்து அவர் மிகவும் குண்டாக இருப்பதாக கூறி அவர் மனம் வருந்தும்படியான கமெண்ட்ஸ்களை பதிவிடுகின்றனர். ரசிகர்களின் இந்த கேலி, கிண்டல் தன்னை ஒரு கட்டத்தில் மனஅழுத்தத்தில் தள்ளி விட்டதாக தனது அனுபவத்தை தற்போது அதே சோஷியல் மீடியா வழியே ஷேர் செய்து உள்ளார்.

இதுவரை தன் உருவத்தை கேலி செய்து கமெண்ட்ஸ் மூலம் காயப்படுத்திய 8,000-க்கும் மேற்பட்டோரை இன்ஸ்டாவில் பிளாக் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கேலி செய்யும் நபர்களுக்கு அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுத்து வந்தாலும், அவர்களை பிளாக் செய்வது சரி என்று தோன்றியதால் அப்படிப்பட்ட நபர்களை பிளாக் செய்ய துவங்கியதாக கூறி இருக்கிறார். இன்ஸ்டா பயன்படுத்த துவங்கிய பின்னர் தான் பாடி ஷேமிங் எனப்படும் உருவகேலியை அதிகமாக எதிர் கொண்டதாகவும், துவக்கத்தில் ஒவ்வொரு கமெண்ட்ஸையும் பார்க்கும் போது மிகுந்த மனவேதனை அடைந்து மன அழுத்தம் உருவானதாக தெரிவித்துள்ளார். அப்போது எனது தாய் தான் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

Also read... சட்டையின்றி வெளியான சிம்பு புகைப்படம் - அதிர்ந்த ரசிகர்கள்!

இந்த பாதிப்பிலிருந்து விடுபட தனக்கு சுமார் வருடம் ஆனதாக கூறியுள்ளார். முன்பெல்லாம் என்னை பற்றி தவறாக அல்லது நெகட்டிவாக பேசுபவர்களைக் கண்டு பயப்படுவேன். ஆனால், இப்போது அது போன்ற மனக்குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிவாக இருக்கிறேன் என்றும் நடிகை நேஹா மீனம் கூறி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் நேஹா மேனனுக்கு சகோதரி பிறந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் இந்த வயதில் உங்கள் தாய், தந்தைக்கு இது தேவையா, உங்களுக்கு இந்த வயதில் ஒரு தங்கை தேவையா என்றெல்லாம் நெட்டிசன்களின் வீண் பேச்சுக்கு நேஹா மேனன் இலக்கானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: