படவா கோபியின் 25வது ஆண்டு கல்யாண நாள் - விஜய் டிவியில் கொண்டாட்டம்!

படவா கோபி-ஹரிதா

மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் படவா கோபி - ஹரிதா தம்பதியின் 25வது ஆண்டு கல்யாண நாள் நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • Share this:
விஜய் டிவியில் மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சரத் - கிருத்திகா, மைனா நந்தினி - யோகேஷ், படவா கோபி - ஹரிதா, வேல்முருகன் - கலா, தீபா தம்பதி, கானா சுதாகர் தம்பதி மற்றும் ராஜ்மோகன் தம்பதி என 7 தம்பதிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். பிரபல தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நடிகை திவ்ய தர்ஷினி ஆகியோர் நடுவர்களாவும், மா கா பா ஆனந்த் மற்றும் அர்ச்சனா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் வித்தியாச ரவுண்டுகளுடன் நடைபெறும் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்த்து வருகின்றனர். சமையல், நடனம் உள்ளிட்ட விறுவிறுப்புக்கு பஞ்மில்லாமல், காமெடிக்கு குறையுமில்லாத வகையில் போட்டிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், போட்டியாளர்களின் பிறந்தநாள், கல்யாண நாளும் இந்த ஷோவில் விமர்சையாக சக போட்டியாளர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. அந்தவகையில், மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 -யில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள படவா கோபி மற்றும் ஹரிதா தம்பதியினர் அண்மையில் 25 வது ஆண்டு கல்யாண நாளைக் கொண்டாடினர்.

  
View this post on Instagram

 

A post shared by Badava Gopi Actor (@badavagopi)
 

தம்பதிகளுக்கான ஷோவில் பங்கேற்றுள்ள அவர்களின் திருமண நாளை மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் கொண்டாட தவறவில்லை. படவா கோபி மற்றும் ஹரிதா தம்பதியினரின் இந்த திருமண நாளை, வெகு சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து, அந்த ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கேக் வெட்டி தங்களின் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதேபோல், பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தையும் அவர்களுக்கு தெரிவித்தனர்.

Also Read : என்னவளே அடி என்னவளே! நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படங்கள்..

இந்த மகிழ்ச்சியான நிகழ்வை படவா கோபியும், அவரது மனைவி ஹரிதாவும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் ஹரிதா நிகழ்ச்சிக்காக சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கிறார். இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு மேல் எழுதியுள்ள கேப்சனில், தங்களின் சில்வர் ஜூப்ளி திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடியதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்க்காத நினைவுகளும், அன்பும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு குடும்பமாக மாறியிருக்கும் சக போட்டியாளர்களிடம் இருந்து கிடைத்ததாக தெரிவித்துள்ள ஹரிதா, அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

 இதேபோல், படவா கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிஸ்டர் & மிஸ்ஸஸ்  சின்னத்திரை நிகழ்ச்சியில் தங்களின் திருமண நாள் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். படவா கோபி விரைவில் வெளியாக இருக்கக்கூடிய அபி டெய்லர் என்ற சீரியலில் சுந்தரமூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். வெள்ளித்திரையில் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான படவா கோபி சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு பன்முகத் திறமையாளர். காமெடியன், ஆர்.ஜே, மிமிக்கிரி ஆர்டிஸ்ட், பாடகர், கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பல அவதாரங்களிலும் ஏற்கனவே பரிணமித்து தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார். படவா கோபி தம்பதிக்கு ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: