• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாக்கியாவை வெளியே தள்ளும் கோபி.. எழில் கொடுத்த அதிர்ச்சி.. பாக்கியலட்சுமியில் அதிரடி டிவிஸ்ட்..

பாக்கியாவை வெளியே தள்ளும் கோபி.. எழில் கொடுத்த அதிர்ச்சி.. பாக்கியலட்சுமியில் அதிரடி டிவிஸ்ட்..

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

பணம் கிடைக்காத விரக்தியில் கோபி, பாக்யாவை வீட்டு விட்டு வெளியே தள்ளும்போது சரியான நேரத்துக்கு வந்து எழில் காப்பாற்றுவது செம டிவிஸ்டாக இருக்கிறது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல், நாளுக்கு நாள் செம டிவிஸ்டாக சென்று கொண்டிருக்கிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணைந்து பெரிய சமையல் ஆர்டர் எடுக்கும் பாக்யா, சிறப்பாக சமைத்து ஆர்டரை டெலிவரி செய்கிறார். சாப்பாடு சரியாக இருந்தால் மட்டுமே பேசப்பட்ட ஊதியமான 3 லட்சம் ரூபாய் கிடைக்கும் என ஒப்பந்ததாரர் சொல்லிவிடுவதால், பதட்டமாக இருக்கிறார்.

ஆனால், சமையல் சூப்பராக இருப்பதாக கூறிய ஒப்பந்ததாரர் பேசிய தொகையான 3 லட்சத்தையும் கொடுத்து விடுகிறார். இதனால் மகிழ்ச்சியடையும் பாக்கியா, அந்தப் பணத்தை பேங்கில் போட்டு வைக்கலாம் என எண்ணுகிறார். அந்த நேரத்தில், வங்கியில் இருந்து பேசுவதாக கூறும் மர்ம கும்பல், பாக்யாவிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை பக்கா பிளான் போட்டு, திருடிச் செல்கின்றனர். மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்டத்து தெரியவந்ததும் பாக்கியா மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

அந்தநேரத்தில், அக்கம்பகத்தினர் தங்களுக்கான பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என வீட்டிற்கே வந்து முறையிடுகின்றனர். பாக்கியாவின் மாமனார், தான் வங்கியில் வைத்திருக்கும் பென்ஷன் பணத்தை எடுத்துக் கொடுப்பதாக உறுதியளிக்கிறார். பாக்கியாவை வங்கிக்கு அழைத்துச் செல்லும்போது, அந்த வங்கியின் மெயின் பிராஞ்சில் மட்டுமே பென்ஷன் தொகை கிடைக்கும் என வங்கி கூறிவிடுகிறது. இது பாக்கியாவுக்கும், அவரின் மாமனாருக்கும் மேலும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

also read :குடும்பமே நடிகர்களா ? வைரலாகும் பாரதி கண்ணம்மா லட்சுமியின் ஒரிஜினல் குடும்பம்..


அக்கம்பக்கத்தினர் அனைவரும் வீட்டில் வந்து முகாமிட்டு சண்டைபோடுவதால், கோபிக்கு ஆத்திரம் தாளவில்லை. அனைத்துக்கு அவமானங்களுக்கும் பாக்யாவே காரணம் எனக் கூறி அவளை கடுமையாக வசைபாடுகிறான். மெயின் பிராஞ்சிக்கு செல்ல வேண்டுமானால் திருநெல்வேலி செல்ல வேண்டும். அடுத்த நாள் சென்று பணத்தை எடுத்துக் கொடுத்துவிடலாம் என பாக்கியாவும், மாமனாரும் வீட்டிற்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் முறையிடும்போது, அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இப்போதே பணம் கொடுத்தாக வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

இதற்கிடையில், பாக்கியாவை ஏமாற்றிய மோசடிக் கும்பலை தேடிப்பிடிக்கும் முயற்சியில் இருக்கிறான் எழில். இந்நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் புரோமோவில், வீட்டில் இருக்கும் கோபி, பாக்கியாவை திட்டித் தீர்க்கிறான். இத்தனை பிரச்சனைக்கும் நீயே காரணம், அதனால் வீட்டை விட்டு வெளியே போ என கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறான். அந்தநேரத்தில் அங்கு வரும் எழில், அம்மா உன்னுடைய 3 லட்சம் ரூபாய் பணம் கிடைத்துவிட்டது எனக் கூறி, பாக்கியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறான். வீட்டில் இருந்த மற்றவர்களும் அதிர்ச்சியடைகின்றனர். எழிலுக்கு எப்படி பணம் கிடைத்தது? மோசடி கும்பலை பிடித்துவிட்டானா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்? என்பது தான் அடுத்த டிவிஸ்ட்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: