ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஆடிய ஃபன் டான்ஸ்!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ்

கோபியாக நடிக்கும் சதீஷின் வில்லத்தனம் ரசிகர்களை உண்மையாக திட்ட வைக்கிறது.

  • Share this:
இல்லத்தரசிகளுக்கு மட்டுமின்றி இளம் வயதினர் துவங்கி முதியோர் வரை பலருக்கும் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை போக்க சரியான தேர்வாக இருக்கிறது டிவி நிகழ்ச்சிகள். ஏராளமான தமிழ் சேனல்கள் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் முதலில் விரும்புவது சீரியல்களை தான். அதனால் தான் எல்லா பிரபல முன்னணி சேனல்களும் காலை ஆரம்பித்து இரவு வரை எண்ணற்ற சீரியல்களை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றன.

எனினும் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஏனென்றால் ஒரே டிராக்கில் போய் கொண்டிருந்த சீரியல்களை சினிமாவை போல விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான சீரியல்களாக முன்னெடுத்து சென்ற பெருமை விஜய் டிவி-க்கு உண்டு. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை. சுவாரஸ்யமான கதையம்சங்களை கொண்ட பல சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பை வரும் நிலையில், திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படித்த கணவரை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்தாலும், குடும்பத்திற்காக ஓடாய் உழைக்கும் குடும்ப தலைவி எதிர் கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. கணவன், 3 பிள்ளைகள். மாமனார், மாமியார், மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வரும் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். அவரது கணவன் கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.

தனியாக மசாலா மற்றும் சாப்பாடு டெலிவரி செய்யும் பிசினஸ் செய்யும் பாக்கியாவின் கணவனான கோபி, தனது கல்லூரி பருவ காதலி ராதிகாவுடன் (ரேஷ்மா பசுபுலேட்டி) வீட்டிலிருக்கும் யாருக்கும் தெரியாமல் பழகி வருகிறார். தவறான உறவு இல்லை என்றாலும் இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்து விட கூடாது என்பதில் தீவிரம் காட்டுகிறார். ஆனால் ராதிகாவும் - பாக்கியாவும் எப்படியோ தோழிகள் ஆகி விட்டதால் பல தகிடுதத்த வேலைகளில் ஈடுபடுகிறார். பாக்கியாவாக நடிக்கும் சுசிதற ஷெட்டியின் வெகுளித்தனம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.

Also read... பூவே உனக்காக சீரியலில் இணைய உள்ள பிரபல சினிமா நடிகை - ரசிகர்கள் ஆவல்!

அதே சமயம் கோபியாக நடிக்கும் சதீஷின் வில்லத்தனம் ரசிகர்களை உண்மையாக திட்ட வைக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களை ஒன்றிப்போக செய்துள்ளது இந்த சீரியல். இதனிடையே பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் செய்த லூட்டி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ராதிகா கேரக்டரில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார். பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் நடந்த வேடிக்கை என்று இந்த போஸ்ட்டிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் ரேஷ்மா. 
View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)


வீடியோவில் பேக்ரவுண்டில் பிஜிஎம் ஒலிக்கிறது. அதில் ராதிகாவுடன் கோபி பேசி கொண்டிருக்கும் போது, சட்டென்று பாக்கியாவும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் செல்வியும் வந்து விடுகின்றனர். இதையடுத்து கையில் இருக்கும் ஹெல்மெட்டை சட்டென்று தலையில் மாட்டி கொள்ளும் கோபி, இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார். பாக்கியாவோ கோபியை அடிக்க செல்வது போல கையை முறுக்குகிறார். இறுதியாக நால்வரும் சேர்ந்து தங்கள் கைகளையும், கால்களையும் ஆட்டி ஒரு டான்ஸ் ஸ்டெப் போடுகின்றனர். சின்னத்திரை ரசிகர்களிடையே இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: