பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான 2வது காரணம் இதுதான்-வீடியோ வெளியிட்ட ஜெனிபர்

நந்திதா ஜெனிபர்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நந்திதா ஜெனிஃபர் தனது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார்.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. அதில் ப்ரைம் டைமிங் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த முக்கியமான சீரியலாக இருந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி, பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார். இவரது கணவர் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார்.

இந்த தம்பதியருக்கு செழியன், எழில், இனியா என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்களுடன் கோபியின் தாய் மற்றும் தந்தை அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் நடிகை நந்திதா ஜெனிபர், ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராதிகாவும் - பாக்கியாவும் நல்ல நண்பர்களாக உள்ளனர். ஆனால் தற்போது வரை ராதிகாவிற்கு, கோபி பாக்கியாவின் கணவர் என்பது தெரியாமலும், பாக்கியா மற்றும் குடும்பத்தினருக்கு ராதிகா கோபியின் தோழி மற்றும் முன்னாள் காதலி என்பது தெரியாமலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டு வருகிறது.

கோபியின் தில்லாலங்கடி வேலைகளுக்கு மத்தியில் சாந்தமான நடிப்பால் ராதிகா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகையும் மற்றும் டான்ஸரான நந்திதா ஜெனிஃபர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராதிகா கேரக்டரில் நந்திதா ஜெனிஃபருக்கு பதிலாக பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா மாற்றப்பட்டார். விஜய் டிவி இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

Also Read :சினிமாவில் கிடைக்காத புகழ் எனக்கு சீரியலில் கிடைச்சது - பூவே உனக்காக சீரியல் நடிகை

நடிகை நந்திதா ஜெனிபர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறியது ஏன் என தெரியாமல் இருந்த நிலையில், முதலில் தனது வேடம் நெகட்டிவாக செல்ல இருக்கிறது அதனால் வெளியேறினேன் என தனது யூடியூப் பக்கத்தில் முதல் காரணம் கூறியிருந்தார். இந்தநிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார். இதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேற ஒரு காரணம் என தனது புதிய வீடியோவில் கூறியுள்ளார்.


மிகவும் அழகாக வேடத்தில் குடும்ப பெண்ணாக இதுவரை நடித்து வந்த நடிகை ஜெனிபருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகியதால் அதிர்ச்சியடைந்தனர். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ரேஷ்மா, தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்தாலும் நடிகை நந்திதா ஜெனிபர் கதாபாத்திரம் அவருக்கு தான் பொருத்தமாக இருந்தது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: