"பஸ் ஸ்டான்ட்ல ஓரமா நின்னு லுக்கு விட்டவன், குட்டி சுவத்துல உட்காந்து சைட் அடிச்சவன்லாம் மாட்டிக்கிட்டு, செம்ம அடி வாங்குறான். ஆனா 'தில்லு முள்ளு' ரஜினிகாந்த்தை மிஞ்சும் அளவிற்கு.. ராதிகா கிட்ட ஒரு மாதிரியும், பாக்கியலட்சுமி கிட்ட ஒரு மாதிரியும் டபுள் ரோல் ஆக்டிங் பண்ணும் இந்த கோபி மட்டும்.. யார்கிட்டயுமே சிக்க மாட்றாப்ல.. ஒருநாள் மாட்டுவடி மாப்ள.. அன்னைக்கு இருக்கு உனக்கு கச்சேரி!" என்று ரசிகர்களை பல்லை கடிக்க வைக்கும் ஒரு சீரியல் நடிகர் இருக்கிறார் என்றால். அது சதீஷ் குமார் தான்!
தன் நடிப்பால், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தால் ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நெகட்டிவ் ரோலில் நடித்ததன் விளைவாக ஒரு நடிகருக்கு கிடைக்கும் திட்டுக்களும் முக்கியமே! அப்படியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சிமி சீரியலை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் திட்டித்தீர்க்கும் ஒரு கதாபாத்திரம் தான் கோபி; குறிப்பிட்ட கேரக்டரில் கோபியாகவே வாழும் சீரியல் நடிகர் தான் சதிஷ் குமார்!
மனைவி பாக்கியலட்சுமியிடம் - வெறுப்பான முகம், மூத்த மகன் செழியன் மற்றும் மகள் இனியாவிடம் - அக்கறைமிக்க முகம்; இளைய மகன் எழிலிடம் - திமிரான முகம்; அம்மாவிடம் - நல்ல பிள்ளை போன்ற முகம்; முன்னாள் காதலி ராதிகாவிடம் - ரொமான்டிக் ஆன முகம் என கோபியாக நடிக்கும் சதீஷ் குமாரை ஒரு "சீனியர் அந்நியன்" என்றே கூறலாம்! அந்த அளவிற்கு நடிப்பில் 'வேரைட்டி' காட்டும் சதீஷின் உண்மையான மனைவியை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?
Also Read : விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்.. சீரியல் நடிகையின் ஆசை!
பாக்கியலட்சுமி சீரியலில், முன்னாள் காதலி - சொந்த வாழ்க்கை மற்றும் மனைவி - சொந்த குடும்பத்திற்கு மத்தியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் கோபி (அதாவது நடிகர் சதீஷ் குமாரின்) ரியல் லைஃப் மனைவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. வெளியான புகைப்படத்தில், தன் மனைவியுடன் நிற்கும் சதீஷ் குமார், கட் பனியன் போட்டுகொண்டு சும்மா கெத்தாக செல்பீக்கு போஸ் கொடுத்து உள்ளார்.
இப்படி கோபியின் ரியல் லைஃப் ஒருபக்கம் இருக்க, ரீல் லைஃப்பை பொறுத்தவரை, அதாவது பாக்கியலட்சுமி சீரியலை பொறுத்தவரை, ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளை வைத்து - நாமெல்லாம் எதிர்பார்த்தது போலவே - விஜய் டிவி ஒரு மெகா சங்கமம் நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் பாக்கியலட்சுமி வீட்டிற்கு படையெடுக்கிறது. கடந்த முறை நடந்த சங்கமம் நிகழ்ச்சியை போலவே இம்முறையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்கள் கோபியை ஒரு வழி செய்து விடுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
Also Read : டாக்டரைத் தொடர்ந்து டான் படத்திலும் பிரியங்கா மோகன் இடம்பெற்றது எப்படி? – சிவகார்த்திகேயன் பதில்
மனைவி பாக்கியலட்சுமி உடன் தூங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், ராதிகாவுடன் ஆன 'நைட் டைம் போன் கால்'களுக்காக கோபி ஏற்கனவே பாத்ரூம், படிக்கட்டு என்று அலைந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மத்தியில் ராதிகாவுடன் கோபி எப்படி 'போன் ரொமான்ஸ்' செய்யப்போகிறார் என்பதை பார்க்க செம்ம ஃபன் ஆக இருக்க போகிறது!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.