• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல இயக்குனருடன் பாக்கியலட்சுமி அமிர்தா எடுத்த ஃபோட்டோ.. கேள்விகளால் துளைக்கும் ரசிகர்கள்!

பிரபல இயக்குனருடன் பாக்கியலட்சுமி அமிர்தா எடுத்த ஃபோட்டோ.. கேள்விகளால் துளைக்கும் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி அமிர்தா

பாக்கியலட்சுமி அமிர்தா

வரவிருக்கும் எபிசோடில் என் தோற்றத்தை யூகிக்கவும் நண்பர்களே .

  • Share this:
    ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி முன்னணி சேனலாக இருந்து வருகிறது ஸ்டார் விஜய்.

    இதில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சில கலைஞர்கள் தங்களது அன்றாட நிகழ்வுகள், ஷூட்டிங் ஸ்பாட்களில் எடுக்கப்படும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளவர் நடிகை ரித்திகா.1994-ல் மே 12-ம் தேதி பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மீடியா துறையில் மிகவும் பிரபலமாக உள்ளார்.

    கோவையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் தனது கல்லூரி படிப்பை (Msc Computer Science) சென்னையில் முடித்தார். கல்லூரி வாழ்க்கைக்கு பின் மாடலிங் துறையில் ஈடுபட்ட இவர், திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களுக்கான ஆடிஷன்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். ஒருவழியாக தனது முதல் டிவி சீரியலாக "ராஜா ராணி" சீரியலில் அறிமுகமானார்இதன் பின்னர் தற்போது விஜய் டிவி-யில் இரவு 8.30-க்கு ஒளிபரப்பாகும் இல்லத்தரசிகளின் ஆதரவு பெற்ற ஹிட் சீரியலான பாக்கியலட்சுமியில், எழிலுக்கு ஜோடியாக அம்ரிதா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த சீரியலில் இவர் வெளிப்படுத்தி வரும் முதிர்ச்சியான நடித்து திறன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பெருகினர். இதனிடையே பிக்பாஸில் மட்டுமே வைல்ட் கார்ட் என்ட்ரி இருந்து வந்த நிலையில், விஜய் டிவி-யின் மற்றொரு பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பாலாவுடன் இணைந்து பங்கேற்றார்.இதில் குக்காக ரித்திகாவும், பாலா கோமாளியாகவும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தனர். தொடர்ந்து ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் 8, நம்வர் கமல் உள்ளிட்ட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்து இருக்கும் நடிகை ரித்திகா, தற்போது "காமெடி ராஜா கலக்கல் ராணி" காமெடி ஷோவில் மீண்டும் பாலாவுடன் பங்கேற்று வருகிறார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Tamilselvi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamil_rithika)






    சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ரித்திகா போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். அதில் தான் மூத்த இயக்குனரும், நடிகருமான பாக்யராஜுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். "காமெடி ராஜா கலக்கல் ராணி" ஷோவிற்கு சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் வந்த போது அவருடன் எடுத்து கொண்ட போட்டோவை தான் ரித்திகா இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.

    "புகழ்பெற்ற பாக்யராஜ் சாரை சந்தித்ததில் மகிழ்ச்சி.. வரவிருக்கும் எபிசோடில் என் தோற்றத்தை யூகிக்கவும் நண்பர்களே .." என்று கேப்ஷனிட்டு இந்த போட்டோவை ஷேர் செய்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபலமாக திகழும் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜுடன், நடிகை ரித்திகா எடுத்து கொண்டுள்ள போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: