Home /News /entertainment /

திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு சைகையில் பதில் சொன்ன பாக்கியலெட்சுமி ரித்திகா.!

திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு சைகையில் பதில் சொன்ன பாக்கியலெட்சுமி ரித்திகா.!

rithika

rithika

Rithika Tamil Selvi | பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகியின் செல்ல மகனான எழிலுக்கு ஜோடியாக நடிக்கும் ரித்திகா, வெறுமென ஒரு சப்போர்டிங் ரோல் ஆக வலம் வராமல் - ஒரு விதவை தாயாக, மறுமணம் செய்து கொள்வதில் இருக்கும் சமூக சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு இளம் பெண்ணாக - ஒரு புரட்சிகரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
2018 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா தமிழ்செல்வியை ஒட்டுமொத்த தமிழ் டிவி ரசிகர்களுக்குக்கும் அறிமுகம் செய்த பெருமை - பாக்கியலட்சுமி சீரியலுக்கும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்குமே சேரும்!

நம்மவர் கமல், ஸ்டார்ட் மியூசிக் (சீசன் 2) மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருந்தாலும், பல்வேறு டிவி விளம்பரங்களிலும் நடித்து இருந்தாலும், அவ்வளவு ஏன்? 2020 ஆம் ஆண்டில் ஆரஞ்சு ஹெட் புரொடக்ஷன்ஸ் இயக்கி, வெளியிட்ட' 4ஜி' என்கிற குறும்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தாலும் கூட பாக்கியலட்சுமி சீரியலும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியுமே ரித்திகா கேரியரின் திருப்புமுனை ஆனது!

பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகியின் செல்ல மகனான எழிலுக்கு ஜோடியாக நடிக்கும் ரித்திகா, வெறுமென ஒரு சப்போர்டிங் ரோல் ஆக வலம் வராமல் - ஒரு விதவை தாயாக, மறுமணம் செய்து கொள்வதில் இருக்கும் சமூக சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு இளம் பெண்ணாக - ஒரு புரட்சிகரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், பாக்கியலட்சுமி சீரியல் வழியாக பெரிய அளவிலான பிரபலத்தன்மையை பெறாத ரித்திகா, ஒரு போட்டியாளராக தான் கலந்துகொண்ட குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி வழியாக எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். நம்பினால் நம்புங்கள், ரித்திகா தமிழ்செல்வியை இன்ஸ்டாகிராமில் மொத்தம் 1.6 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்! 

சமூக ஊடங்களில் படு ஆக்டிவ் ஆக இருக்கும் ரித்திகா தமிழ்செல்வி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வழியாக ரசிகர்களுடன் கலந்துரையாடும் நோக்கத்தின் கீழ், "என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள்" என்று கூறி இருந்தார். அதன் வழியாக ரசிகர்கள் பலரும் கேட்ட பலவகையான கேள்விகளுக்கு, ரித்திகா சுவாரசியமான பதில்களை அளித்துள்ளார். மொத்த கலந்துரையாடலிலும், ரித்திகாவின் திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி தான் ஹைலைட். ஆனால் அதற்கு ரித்திகா கொடுத்த ரியாக்ஷன் இருக்கிறதே - அது தான் அல்டிமேட்!

Also Read : உலகின் மிக உயரமான இடத்திலிருந்து செல்ஃபி பதிவிட்ட ப்ரியா வாரியர்..

ரித்திகாவின் ரசிகர் ஒருவர் "எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க?" என்று கேட்க, அதற்கு ரித்திகா வாய் வார்தையாக எந்த பதிலையும் அளிக்காமல், "நம்ம கையில என்ன இருக்கு.. எல்லாம் நம்ம தலையெழுத்துபடி தான் நடக்கும்" என்கிற பாணியிலான சைகையை காட்டி ரசிகர்களை புன்னகைக்க வைத்துள்ளார்.

Also Read : தமிழகத்தில் காணாமல் போகும் தனி திரையரங்குகள்!

திருமணம் தவிர்த்து, இந்த கலந்துரையாடலின் போது ரித்திகாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. ஒருவர் "அக்கா உங்களுக்கு பிடித்த பாடல் ஒன்றை பாடுங்கள்" என்று கேட்க, உடனே ரித்திகா விஜய் நடிப்பில் வெளியான 'ஷாஜகான்' திரைப்படத்தில் வரும் "மெல்லினமே மெல்லினமே" பாடி அசத்தினார். இதேபோல, "குக்கு வித் கோமாளி சீசன் 2 Vs சீசன் 3-இல் எப்போது வருவீங்க?" என்று ஒருவர் கேட்க, தெரியவில்லை உங்களை போலவே நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார் ரித்திகா தமிழ்செல்வி.
Published by:Selvi M
First published:

Tags: Entertainment, TV actress

அடுத்த செய்தி