என்னாச்சு பாகுபலி ராணாவுக்கு... பல்வாள் தேவன் நலமா..?

ராணா டக்குபதி

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகர் ராணா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

  அஜித்தின் ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராணா டகுபதி. அதைத்தொடர்ந்து பாகுபலி படத்தில் நடித்த ராணா டகுபதிக்கு அப்படம் பெரும் வரவேற்பையும், ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. தற்போது அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசுக்கு காத்திருக்கிறது.

  இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரத்துக்கான புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதை அவரது பழைய புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் நம்ப முடியாத அளவுக்கு தனது உடல் எடையைக் குறைத்திருப்பது தெரிய வரும்.

  பாகுபலி படத்தில் கம்பீரமாக வலம் வந்த பல்வாள் தேவனா இது எனும் அளவுக்கு மெலிந்த உடலுடன் அவர் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

  இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு, உடம்புக்கு எதுவும் பிரச்னையா, நலமாக உள்ளீர்களா என்று நலம் விசாரித்து வருகின்றனர்.
  கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அதை வதந்தி என்று மறுத்திருந்தார் ராணா. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுஒருபுறமிருக்க ராணா விரதபர்வம் 1992 என்ற தெலுங்கு படத்துக்காக தனது உடல் எடையை அதிரடியாக குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

  வீடியோ பார்க்க: கர்ணன் சிவாஜி VS தளபதி ரஜினி!

  Published by:Sheik Hanifah
  First published: