Home /News /entertainment /

6 வருடங்கள் கழித்து அழகியில் இருந்து அருவிக்கு - ஆளே மாறிப்போன சோனியா!

6 வருடங்கள் கழித்து அழகியில் இருந்து அருவிக்கு - ஆளே மாறிப்போன சோனியா!

சோனியா

சோனியா

Serial actress Sonia : ஷோபா அம்மா என் கணவருடைய ஃபேமிலி பிரெண்ட் ஆவார். திருமணமாகி கணவருடன் சென்ற பிறகு ஷோபா அம்மாவும் நானும் க்ளோஸ் ஆகிட்டோம். அவர் என்னை விட பெரியவர் தான் என்றாலும் நாங்கள் க்ளோஸ் பிரண்ட்டா தான் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
கொரோனோ தொற்றுநோயின் விளைவாக வீட்டிற்குள்ளேயே முடங்கிய நம்மில் பலருக்கும் பெரும்பாலும் இருந்த ஒரே பொழுதுபோக்கு - டிவி பார்ப்பது தான். ஆண்களும், சிறுவர்களும் நியூஸ், கார்ட்டூன் போன்றவைகளுக்காக நீண்ட நேரம் ரிமோட் கண்ட்ரோலை சொந்தமாக்கி வைத்திருந்தாலும் கூட பெண்களுக்கான நேரம், அதாவது சீரியல் டைம் வந்துவிட்டால் சரண்டர் ஆகித்தான் போக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களுடன் அமர்ந்து சீரியல்களையும் பார்த்து தான் ஆகவேண்டும்.

இதன் விளைவாக ஒவ்வொரு சேனலின் ரேட்டிங்கும் எகிறியது. அதன் தொடர்ச்சியாக ஆண்களையும் கவரும் நோக்கத்தின் கீழ், பல சேனல்கள், வித்தியாசமான கதைக்களத்துடன் நாடகங்களை ஒளிபரப்ப தொடங்கின. சீரியல் எந்த மாதிரியான உச்சத்தை அடைந்துள்ளது என்றால்? சீரியல் மட்டுமல்ல, அதில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் 'ஆர்மி' உருவாகி வருகிறது.

இந்த பட்டியலின் கீழ் அந்த காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் சீரியல் நடிகை சோனியா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்ற சீரியலான 'அழகி'யில் திவ்யா என்கிற பெயரில் ஒரு அமைதியான குடும்ப தலைவியாக நடித்து பிரபலம் அடைந்தவர் தான் இந்த சோனியா. அந்த நேரத்திலேயே பல சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சோனியா திருமணம் செய்துகொண்ட பின்னர் நாடகங்களில் நடிப்பதில் நிறுத்திக்கொண்டார்; இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்தமாக விலகியே விட்டார்.

ALSO READ |  கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

தற்போது பல வருடங்கள் கழித்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அருவி' என்கிற தொடரில், சோனியா ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்தில் அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில், "திருமணம் செய்த பிறகு சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு அருவி நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் தான் என்னுடைய முதல் சீரியல் ஆரம்பித்தது. அதே சன் டிவி வழியாக ஒரு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் கிடைத்துள்ளது.

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சீரியலில் நான் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன். ஆரம்ப கால சூட்டிங்கில், ஸ்பாட்டில் இருந்த எல்லோரும் நான் புதிதாக நடிக்க வந்த நடிகை என்று தான் நினைத்தார்கள். பின்னர் தான் நான் ஏற்கனவே சீரியலில் நடித்தது மற்றவர்களுக்கு தெரியவந்தது. அது மட்டுமில்லாமல் முன்னர் நடித்த சீரியல்களில் நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன். இப்போது வெயிட் லாஸ்லாம் பண்ணி உடம்பை குறைத்து இருக்கிறேன். அதனால் தான் பல பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை." என்று கூறினார்.

ALSO READ |   தனுஷ் - ஐஸ்வர்யாவின் ஃபேமிலி போட்டோஸ்

"நான் சீரியலில் நடிப்பதற்கு என் குடும்பம் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளேன் என்று கூறும்போதும் கூட எந்த தடையும் சொல்லாமல், விருப்பப்படி செய் என்றனர். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சில வருடங்கள் கழித்து கேமரா முன்பு நிற்கும் போது புது அனுபவமாகவே இருந்தது. அதுமட்டுமின்றி நான் நடிக்கும் சீரியலில் இருக்கும் அனைவருமே என்னிடம் நன்றாக பழகுகிறார்கள். நடிப்பதை தவிர்த்து நாங்கள் ‘சார்விக்’ஸ் இட்லி / தோசை மாவு’ என்கிற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறோம். இரண்டையுமே நான் சமாளித்து வருகிறேன்."

"அதேபோல் எனக்கு ஷோபா அம்மாவும் ரொம்ப க்ளோஸ் பிரண்டு (ஆம் நம்ம தளபதி விஜய்யின் அம்மாவைதான் சொல்கிறார்). ஷோபா அம்மா என் கணவருடைய ஃபேமிலி பிரெண்ட் ஆவார். திருமணமாகி கணவருடன் சென்ற பிறகு ஷோபா அம்மாவும் நானும் க்ளோஸ் ஆகிட்டோம். அவர் என்னை விட பெரியவர் தான் என்றாலும் நாங்கள் க்ளோஸ் பிரண்ட்டா தான் இருக்கிறோம். இருவரும் பர்சனல் விஷயங்களை பரிமாறிக்கொள்வோம். இருப்பினும் விஜய் சாரை பற்றி அவரிடம் எதுவும் கேட்டதே இல்லை. எங்களைப்பற்றி பேசவே நேரம் சரியாக இருக்கும். அருவி சீரியல் டெலிகாஸ்ட் செய்யப்பட்டதும் பார்த்துவிட்டு என்னை ஷோபா அம்மா பாராட்டினார்." என்றும் சோனியா கூறினார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Aruvi actress, Entertainment

அடுத்த செய்தி