சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இசைப்பரிசு அறிவித்த ‘அயலான்’படக்குழு

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இசைப்பரிசு அறிவித்த ‘அயலான்’படக்குழு

அயலான்

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இசைப்பரிசு அளிக்க முடிவு செய்திருக்கிறது அயலான் படக்குழு.

  • Share this:
‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு, இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் வேற்றுக்கிரகவாசியும், சிவகார்த்திகேயனும் கையில் மிட்டாய் வைத்தபடி இருந்தனர். இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில் இதனிடையே டாக்டர் படத்தை முடித்தார் சிவகார்த்திகேயன்.

இதையடுத்து ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டரில் எழுதியிருக்கும் படத்தின் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அனைவருக்கும் ஒரு இசைப்பரிசு என்று குறிப்பிட்டிருக்கிறார்.நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: