காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர் - குவியும் வாழ்த்துகள்!

நடிகர் அவினாஷ்

அவினாஷ் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அம்மன்’ சீரியலில் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 • Share this:
  சீரியல் நடிகர் ஒருவர் தனது காதலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

  இணைய யுகத்தில் பிரபலங்களின் ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படும். அவர்களின் படங்கள் ஒவ்வொன்றும், ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு, வைரலாகும். சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல், சீரியல் பிரபலங்களும் இணையத்தின் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் சீரியல் நடிகர் அவினாஷ் தனது காதலி, தெரெசாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
  ரசிகர்கள் தங்கள் அன்பை இந்த காதல் பறவைகளுக்கு பொழிந்து வருகின்றனர். அவினாஷும் தெரெசாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருப்பவர்கள். பல ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். அவினாஷ் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘அம்மன்’ சீரியலில் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

  சன் டிவி-யில் ‘அழகு’ சீரியல் (திருநாவுக்கரசு / திருநாவாக) மற்றும் ‘சாக்லேட்’ (அனிருத்) சீரியலில் நடித்ததற்காக அறியப்பட்டவர். அதோடு பல்வேறு நடன ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்துள்ளார். டான்ஸ் கேரளா டான்ஸ், லிட்டில் மாஸ்டர், டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0, தில்லானா தில்லானா மற்றும் ஓடி விளையாடு பாப்பா உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: