Home /News /entertainment /

கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பால் சாத்தியம் - திருமாவளவனுக்கு சூர்யா கடிதம்!

கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பால் சாத்தியம் - திருமாவளவனுக்கு சூர்யா கடிதம்!

தங்களது வாழ்த்தும், பாராட்டும் மன நிறைவை அளித்தன என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

தங்களது வாழ்த்தும், பாராட்டும் மன நிறைவை அளித்தன என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

தங்களது வாழ்த்தும், பாராட்டும் மன நிறைவை அளித்தன என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்ததனர். இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று 'ஜெய்பீம்' திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள 'கலைநாயகன்' சூரியா அவர்களையும், அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலு அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தங்கள் வாழ்த்தும், பாராட்டும் மனநிறைவை அளித்தன, ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்தொகையில்‌ மிகச்‌ சிறுபான்மையினராக இருக்கும்‌.
    பழங்குடிகள்‌ நலன்‌ சார்ந்து தாங்களும்‌ தங்கள்‌ இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள்‌
    குறிப்பிட்டதைப்‌ போல, மாண்புமிகு தமிழக முதல்வர்‌ பழங்குடியின மக்களின்‌ நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண
    உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும்‌ மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.

    பாதிக்கப்படும்‌ மக்களின்‌ பிரச்சனைகளை அனைவரிடமும்‌ கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்‌ பீம்‌ திரைப்படத்தின்‌ நோக்கம்‌. கவன படுத்துவது மட்டுமே. கலைப்படைப்பின்‌ மூலம்‌ சாத்தியம்‌. உண்மையான சமூக மாற்றங்களை அரசும்‌, அரசியல்‌ இயக்கங்களும்‌ மட்டுமே உருவாக்க முடியும்‌. ஊக்கமூட்டும்‌ தங்கள்‌ வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Actor Surya, Jai Bhim, PMK, Thirumavalavan, VCK

    அடுத்த செய்தி