முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vadivelu: மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வரும் வடிவேலு...!

Vadivelu: மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வரும் வடிவேலு...!

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

சங்கர், வடிவேலு இடையே சுமூகம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தால் வடிவேலுக்கு தமிழ்சினிமாவில் ரெட் கார்டு போடப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைகள் மூலம் வடிவேலுவை மீண்டும் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவின் முடிசூடா நகைச்சுவை மன்னன் என்று வடிவேலுவை கூறிவிடலாம். வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இல்லாமல் ஒரு நாளை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது என்ற அளவு, வடிவேலு நகைச்சுவை காட்சிகள் நீக்கமற நிறைந்திருக்கிறது தமிழ்ச் சமூகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசியல், சமூகம் என அன்றாட நிகழ்வுகளை ஏதோ ஒரு வடிவேலு நகைச்சுவை காட்சியுடன் இணைத்து அன்றாடம் இணையதளத்தில் மீம்ஸ்கள் உலா வந்த வண்ணம் உள்ளன.

திரைப்பட உலகில் உச்சத்தில் இருந்த பொழுது 2011ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தேமுதிக இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்ததால், அவரின் திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

அவ்வப்போது மெர்சல் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் வடிவேலு தலைகாட்டி வந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் - வடிவேலு கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் 2வது பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் பணிகள் துவங்கியது முதலே இயக்குனர் சிம்புதேவனுக்கு வடிவேலுக்கு மிடையே பனிப்போர் துவங்கியது, திரைப்படத்திற்கு இம்சை அரசன் ஆன வடிவேலு படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வழங்கும் ஆடைகளை ஏற்க மறுப்பதாக புகார் எழுந்தது.

சிம்புதேவன் சொன்ன காட்சிகளின் வடிவேலுவுக்கு சம்மதம் இல்லாததால் தொடர்ந்து படத்தின் திரைக்கதையில் மாற்றம் கோரிய வடிவேலுவால் படக்குழுவுக்குள் சலசலப்பு மூழ துவங்கியது.

படத்திற்காக செட் அமைத்து பணிகள் துவங்கிய நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்காமல் வடிவேலு நாட்களை வீணடிக்க தயாரிப்பாளர் சங்கரின் பணம் வீணானது. இதையடுத்து சங்கத்தின் கதவுகளை தட்டிய சங்கர் வடிவேலு இனி திரைப்படங்களில் நடிக்காத வண்ணம் ரெட் கார்டு வாங்கினார்.

Also read... Vijay Sethupathi: மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி...!

நீண்ட நாட்களாக பேசி முடிக்கப்படாமல் உள்ள இந்த விவகாரத்தில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசன் களமிறங்கி உள்ளார். இதேபோல நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரை படத்தை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்டு திரைக்கு கொண்டு வந்த ஐசரி கணேசன் தற்பொழுது இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் உள்ள முரண்களை கலைந்து மீண்டும் படப்பிடிப்பு பணிகளை துவங்க செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக சங்கர் வடிவேலு இடையே சுமூகம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலு என்ற மாபெரும் கலைஞனின் திறமை, அரசியல் போட்டி மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் முடிக்கப்படாமல் மீண்டும் தமிழ் மக்களுக்கு அது அப்படியே கிடைக்க வேண்டும் என்ற ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actor Vadivelu