நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் அடுத்த படம்
இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அந்தகாரம்’ திரைப்படத்தின் உரிமையை நெஃட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் அட்லீ
- News18 Tamil
- Last Updated: May 31, 2020, 6:36 PM IST
கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் மார்ச் 19-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்போது வரை ஊரங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் OTT தளத்தின் பக்கம் சில தயாரிப்பாளர்கள் திரும்பியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 29-ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ சுமார் நாலரை கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் நேரடியாக OTT ப்ளாட்ஃபாரத்திற்கு 9 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த படத்தைத் தொடர்ந்து, திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், யோகி பாபுவின் காக்டெயில், சந்தானத்தின் சர்வர் சுந்தரம், அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட 12 திரைப்படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் உள்ளன. இந்நிலையில் இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் அந்தகாரம் திரைப்படத்தின் உரிமையை நெஃட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், கிரீடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘அந்தகாரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
அந்த வகையில் கடந்த 29-ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ சுமார் நாலரை கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் நேரடியாக OTT ப்ளாட்ஃபாரத்திற்கு 9 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த படத்தைத் தொடர்ந்து, திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், யோகி பாபுவின் காக்டெயில், சந்தானத்தின் சர்வர் சுந்தரம், அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட 12 திரைப்படங்கள் நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் உள்ளன.
இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.