800 கோடியில் தயாராகும் இரண்டு படங்கள்...!

ஹிர்த்திக் ரோஷன் மற்றும் பிரபாஸ்

இவ்விரு படங்கள் தவிர சீதா என்ற படமும் இந்தியில் எடுக்கப்பட உள்ளது. இதன் பட்ஜெட்டும் 100 கோடிக்கும் மேல். சீதையின் பார்வையில் ராமாயணக் கதையை அணுகும் படம் இது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சுமார் 800 கோடியில், ராமாயணத்தை பின்புலமாகக் கொண்ட இரண்டு படங்கள் தயாராகின்றன. இதில் ஒன்றில் ஹிர்த்திக் ரோஷனும், இன்னொரு படத்தில் பிரபாஸும் நடிக்கின்றனர்.

பாகுபலிக்குப் பிறகு இரு விளைவுகள் நடந்தன. ஒன்று, பிரபாஸ் நடிக்கும் படங்கள் அனைத்தும் 100 கோடியைத் தாண்டிய பட்ஜெட்டில் தயாராகின்றன. இரண்டு, ராமாயணம், மகாபாரதம் கதைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மவுசு. பாகுபலி புராணக்கதை இல்லை என்றாலும், கிட்டத்தட்ட புராணக்கதை மாதிரியே எடுக்கப்பட்டது. இந்தியர்களுக்கு அதிகம் பரிட்சயம் உள்ள ராமாயண, மகாபாரத கதைகளை படமாக்குகையில் பிரமாண்டத்துக்கு பிரமாண்டமும், வசூலுக்கு வசூலும் உத்திரவாதம். தயாரிப்பாளர்கள் இந்திய இதிகாசங்களில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற படம் தயாராகிறது. இது ராமாயணப் பின்புலத்தில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் பட்ஜெட் சுமார் 300 கோடிகள் என்கிறார்கள். பிரபாஸுடன் சயிப் அலிகான், கீர்த்தி சனோன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

Also read... Rajinikanth: மத்திய அரசின் அனுமதியுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி...!

அல்லு அரவிந்த் தயாரிப்பில்  ராமாயண் என்ற படம் தயாராகிறது. ஹிர்த்திக் ரோஷன் ராமனாவும், தீபிகா படுகோன் சீதையாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பட்ஜெட் 500 கோடிகள். ஹாலிவுட்டைச் சேர்ந்த காஸ்ட்யூம், மேக்கப் கலைஞர்களை இந்தப் படத்தில் பயன்படுத்துகிறார்கள். இதுவரை வெளியான ராமாயணப் படங்களில் இதுவே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம்.

இவ்விரு படங்கள் தவிர சீதா என்ற படமும் இந்தியில் எடுக்கப்பட உள்ளது. இதன் பட்ஜெட்டும் 100 கோடிக்கும் மேல். சீதையின் பார்வையில் ராமாயணக் கதையை அணுகும் படம் இதுஇவை தவிர மேலும் பல ராமாயண, மகாபாரத கதைகள் திரைப்படங்களாக உள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: