முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் படம் 150 நாட்கள் ஓடியதா... ‘அசுரன்’ மேடையில் அவுட் பேச்சு

விஜய் படம் 150 நாட்கள் ஓடியதா... ‘அசுரன்’ மேடையில் அவுட் பேச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் நடித்த படம் 150 நாட்கள் ஓடியதாக சொன்னது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை என்று நடிகர் பவன் கூறியுள்ளார்.

வடசென்னை படத்தை அடுத்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படம் அசுரன். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து தனுஷ் நடித்த படங்களிலேயே ரூ.100 கோடி வசூலித்த முதல்படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் 100-வது நாள் வெற்றிவிழா இன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. நடிகர் தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் பவன், “100 நாட்கள் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடுவது அரிதாகி விட்டன. கடைசியாக குருவி திரைப்படத்திற்கு 150 நாட்களில் வெற்றிவிழாவுக்குச் சென்றேன். அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என எனக்கு தெரியவில்லை என்றார். அவரது பேச்சைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் அதிர, இதனை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் தன் சிரிப்பை அடக்கிக் கொள்ள எவ்வளவோ முயன்றும் மேடையிலேயே சிரித்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.

நடிகர் பவன் விஜய்யுடன் குருவி, அஜித்துடன் ஏகன், தனுஷ் உடன் வடசென்னை, அசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் இவர் நடித்த அவுட் கதாபாத்திரம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மேலும் படிக்க: அது ஒரு கனாக்காலம் முதல் அசுரன் வரை... வெற்றிமாறனும் நானும் சகோதரர்களான தருணம் - தனுஷ் நெகிழ்ச்சி!

First published:

Tags: Asuran