முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்... தனுஷ் இடத்தில் யார் தெரியுமா?

‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்... தனுஷ் இடத்தில் யார் தெரியுமா?

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழில் தனுஷ் நடிப்பில் ஹிட் அடித்த அசுரன் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

வடசென்னை படத்தை அடுத்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படம் அசுரன். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தாணு தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் தனுஷ் நடித்த படங்களிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படமாகவும் அசுரனை சாதனை படைத்தது.

தமிழில் இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் அசுரன் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் தயாரிப்பாளர் தாணு, “அசுரன் படத்துக்குக் கிடைத்த மற்றுமொரு சிறப்பான மற்றும் பெருமையான தருணம் இது” என மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.

தெலுங்கில் இந்தப் படத்தை இயக்குவது யார், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: பிரபல நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

First published:

Tags: Asuran