சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்த நடிகர் டீஜே

சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்த நடிகர் டீஜே

நடிகர் டீஜே அருணாச்சலம்

எனக்குப் பிடித்த 90-ஸ் ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது - டீஜே அருணாச்சலம்

  • Share this:
நடிகர் சிம்பு, சுசீந்திரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஈஸ்வரன்’ 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதனிடையே கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியானது. கன்னடத்தில் இயக்கிய நரதனே தமிழிலும் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் தமிழ் ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் நரதன் இயக்க ஒப்பந்தமான அந்தப் படம் கைவிடப்பட்டு தற்போது சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் முஃப்தி ரீமேக் உருவாகிறது. இந்தப் படத்துக்கு ‘பத்து தல’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உடன் நடிகர் டீஜேவும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்து பிரபலமான டீஜே அருணாச்சலம் லண்டனில் இருக்கிறார். பத்து தல படத்தில் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் டீஜே, தனக்குப் பிடித்த 90-ஸ் ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது என்று கூறியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by TEEJAY (@teejayarunasalam)


மேலும் படிக்க: ஆன்மீகத்தின் சிறந்த தொடக்கம்... ஈஷா யோகா மையத்தில் அமலா பால்

ஏற்கெனவே டீஜே அருணாச்சலம் ‘800’ திரைப்படடத்தில் இளம்வயது முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, தனது தாய் ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், போரில் நிறைய கொடுமைகள் நடந்திருப்பதாகவும் கூறி அந்த வாய்ப்பை மறுத்திருந்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: