"நீ கலைஞன்டா... கலைஞன்டா..." - அசாம் ஆட்சியாளர்களை பாராட்டும் திரைத்துறையினர்!

வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்தில் ஒரு காட்சி

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசாமிய மொழி  படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’-ருக்கு அம்மாநில அரசு ரூ.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது.
  உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.
  வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்பட போஸ்டர்   அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்திய படங்கள், கடந்த 21-ஆம் தேதி மும்பையில் திரையிடப்பட்டன.
  வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்தில் ஒரு காட்சி   அதில் ராஸி, பத்மாவத், வில்லேஜ் ராக்ஸ்டார் உள்ளிட்ட 28 படங்கள் அடங்கும். இந்த வரிசையில் அசாமி மொழிப்படமான வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தையும் அனுப்ப ஆஸ்கர் தேர்வுக் குழுவினர் முடிவு செய்தனர். அடிப்படை வசதிகள் இல்லாத அசாமிய கிராமம். அங்கு வாழும் சிறுமி துனு, கிதார் வாசிப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார். தனது கிராமத்தில் ஒரு இசைக்குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
  வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் பட போஸ்டர்   தனது கனவை வென்றாரா என்பதை அற்புதமாக ரிமா தாஸ் இயக்கியுள்ளார். இப்படம் இந்தியாவில் சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த எடிட்டிங், சிறந்த படம், சிறந்த கலை பங்களிப்பு ஆகிய 4 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் அசாம் மாநில அரசு வில்லேஜ் ராக்ஸ்டார் படத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
  விருது பெறும் ரீமா தாஸ்   இதற்கான தீர்மானத்தை, மாநில சட்டசபையில் நிறைவேற்றி, அதன் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் வெல்கிறதோ இல்லையோ, தேர்வானதற்கே ரூ.50 லட்சம் பரிசு வழங்கி கௌரவித்து, திரைத்துறையை ஊக்கவித்த அசாம் அரசை இந்திய திரையுலகமே பாராட்டி வருகிறது.


  ALSO WATCH...  Published by:SPDakshina Murthy
  First published: