அசோக் செல்வனுக்கு ஜோடியான ப்ரியா பவானி சங்கர் - புதிய பட அறிவிப்பு

அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர்

அசோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.

தற்காலிகமாக இந்தப் படத்துக்கு 'Production No8' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சதுரம் 2 பட இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் ப்ரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, விஜய் டிவி யோகி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரவீன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைக்கிறார். ராகுல் எடிட்டராக பணியாற்றுகிறார். இன்று சென்னையில் படத்தின் பூஜை நிகழ்வு நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் ஆயத்தமாகி வருகிறது படக்குழு.இந்தப் படம் தவிர, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர், கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்திலும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

அதேபோல் ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு நெஞ்சமெல்லாம் காதல், ரெட் ரம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதுதவிர மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார் அசோக் செல்வன்.
Published by:Sheik Hanifah
First published: