Arya: டெடி இயக்குனரின் புதிய படத்தில் ஆர்யா - சுவாரஸியமான அப்டேட்!

நடிகர் ஆர்யா

இந்தப் படம் தவிர சாந்தகுமார் இயக்கத்தில் ஒரு படமும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும் ஆர்யா நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான இயக்குனர். அவர் இதுவரை எடுத்தப் படங்கள் அனைத்தும் வெவ்வேவேறு ஜானரை சேர்ந்தவை. நாணயம் வங்கிக் கொள்ளையைப் பற்றியது. நாய்கள் ஜாக்கிரதை துப்பறியும் கதை, மிருதன் ஸாம்பி கதை, டிக் டிக் டிக் விண்வெளியை மையப்படுத்தியது. கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான டெடி ஃபேண்டஸிவகை. தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்த படங்களில் 2.,0 பாகுபலி 2 படங்களைவிட முன்னிலையில் டெடி உள்ளது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறார் ஆர்யா. இந்த செய்தி வெளியானதும், டெடி இரண்டாம் பாகம் என்று சிலர் கதைவிட்டனர்சக்தி சௌந்தர்ராஜனின் இயல்புப்படி ஒரே ஜானரில் அவர் படம் செய்வதில்லை. இந்த புதிய படம் ஆக்ஷன் ஜானரில் தயாராகிறது. படம் முழுக்க ஆக்ஷன் அதிரடிதானாம். தற்போது ஸ்கிரிப்டின் இறுதி வடிவத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் ப்ரீ புரொடக்ஷனை தொடங்கி இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பைத் தொடங்க திட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Also read... Santhanam: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் சபாபதி!

இந்தப் படம் தவிர சாந்தகுமார் இயக்கத்தில் ஒரு படமும், நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும் ஆர்யா நடிக்கிறார். திட்டமிட்டபடி நடந்திருந்தால், நலன் படம் இப்போது பாதி முடிந்திருக்க வேண்டும். ஸ்கிரிப்டை நலன் இழைத்துக் கொண்டிருப்பதால் படம் தொடங்க தாமதமாகிறது என்கிறார்கள். இதுவொரு சூப்பர்ஹீரோ கதை. மூகமூடி போல சொதப்பிவிடக் கூடாது என்பதற்காக நலன் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வதால் இந்த தாமதம் என்கிறார்கள்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: