கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஷாருக்கானின் மகன்.. வைரல் புகைப்படங்கள்..

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஷாருக்கானின் மகன்

ஆரியனுக்கு கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது தனது தந்தை ஷாருக்கான் என்றும் சொல்லலாம். ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார்.

  • Share this:
ஷாருக்கானின் மூத்த மகனான ஆரியன் கான் சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் படங்களை பகிர்ந்து கொண்டார். பாலிவுட் நடிகர் அஹான் ஷெட்டியுடன் ஆரியன் பந்துவீச்சு பயிற்சி செய்து கொண்டிருந்த போது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரியனுக்கு கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது தனது தந்தை ஷாருக்கான் என்றும் சொல்லலாம். ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். அதிலிருந்தே அவருக்கு கிரிக்கெட் போட்டியில் இருக்கும் ஆர்வத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் தனது மகனின் விளையாட்டு ஆர்வத்திற்கு எப்போதும் ஆதரவு அளித்து வருகிறார்.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஷாருக்கானின் மகன்


மேலும் ஷாருக்கானின் மகன் ஆரியன் டேக்வாண்டோவிலும் பயிற்சி பெற்றவர். சிறுவயதிலிருந்தே அவரது படங்கள், பல்வேறு நிகழ்வுகளில் சண்டை போடும் வீடியோக்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. 
View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

தந்தையை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் ஆரியன் நுழைவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ஜான் பாவ்ரூ இயக்கி 2019ல் வெளியான லைவ் ஆக்சன் படமான தி லயன் கிங்கின் இந்தி டப்பிங்கில் சிம்பாவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

 அதே படத்தில் முசாஃபாவுக்கு ஷாருக்கான் குரல் கொடுத்துள்ளார். தற்போது ஆரியன் இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பு துறையில் அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Arun
First published: