Home /News /entertainment /

நான் விவாகரத்து செய்யப் போகிறேனா? - நடிகை ஷபானா

நான் விவாகரத்து செய்யப் போகிறேனா? - நடிகை ஷபானா

நடிகை ஷபானா

நடிகை ஷபானா

Shabana : திருமணத்தில் உறவினர்களால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார் ஷபானா.

சில வாரங்களுக்கு முன் சின்னத்திரை நட்சத்திரங்களின் காதல் திருமணம் வரிசையாக நடந்தேறி களைகட்டியது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மிகப் பெரிய ஹிட்டான செம்பருத்தி சீரியலில் நாயகியான அறிமுகமான ஷபானா, விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் ஆரியனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஷபானா மும்பையைச் சேர்ந்தவர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிகளிலுமே கடந்த சில ஆண்டுகளாக நடித்து வந்துள்ளார். மிகவும் குடும்பப்பாங்கான அமைதியான பாத்திரத்தில் நடித்த ஷபானா சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ரசிகர் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.

செம்பருத்தி சீரியலில் மட்டுமே நடித்து வரும் இவர் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் வெவ்வேறு மதத்தினர். எனவே இவர்களது திருமணத்தில் உறவினர்கள் யாரும் அதிகமாக கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி இருவருமே தங்கள் வீட்டை எதிர்த்து தான் திருமணம் செய்து கொண்டனர் என்றும் கூறப்பட்டது.



இந்நிலையில் இவர்கள் திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே மதன்குமார் மற்றும் ரேஷ்மாவின் திருமணம் நடைபெற்றது. அதில் ஆர்யன் மற்றும் ஷபான மணமக்கள் தோழர்களாகக் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் மதன் ரேஷ்மாவின் திருமணப் புகைப்படங்களும் நெட்டிசன்களால் வைரலாகப் பகிரப்பட்டது.



இருவரின் திருமணத்திற்கும் பெற்றோர்கள். உறவினர்களின் ஆதரவு இல்லாததால் பல்வேறு வதந்திகள் இடையில் எழும்பின. சில நாட்களுக்குமுன் ஷபானாவும் ஆரியனும் விவாகரத்து செய்யப்போவதாகவம் பல்வேறு செய்திகள் வெளியாகின. மேலும் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று யூடியூப் சேனல் ஒன்றும் வெளியிட்டது.எனவே, ஷபானாவின் ரசிகர் ஒருவர் நேரடியாக அவரிடம் விவாகரத்து பற்றி கேள்வி கேட்டுள்ளார்.

ALSO READ |  கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷபானா யூடியூபில் இவ்வாறு போலியான செய்திகளை பரப்புவது மிகவும் தவறானது. உண்மையான தகவல்களை மக்களுக்கு கொடுப்பதில் கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டும். போலி செய்திகளை கண்மூடித்தனமாக நம்பும் பார்வையாளர்கள் நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விவாகாரத்து பற்றிய கேள்விக்கு ஷபானா பகிர்ந்த பதில்



நெருப்பில்லாமல் புகையாது என்பதற்கு ஏற்ப, இவர்கள் இருவரும் விவாகரத்து செய்தி செய்யப்போகிறார்கள் என்ற செய்தி வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் திருமணத்தில் உறவினர்களால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

 




 

திருமணம் முடிந்து, இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், விடுமுறை, அவுட்டிங் என்று பல்வேறு புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த ஷபானாவிடம் இருந்து இடையில் எந்த பதிவுகளும் இல்லை. திருமணம் ஆகி சில வாரங்களே ஆகியுள்ள உடனேயே விவாகரத்து செய்திகள் அதிர்ச்சியாகத் தான் இருந்தன. ஆனால், தற்போது நிலைமை சீராகி விட்டதை அறிந்து கொள்ளும்படி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதை மீண்டும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி