எனிமி பட ஷூட்டிங்கில் நடிகர் ஆர்யாவுக்கு பலத்த காயம்

எனிமி பட ஷூட்டிங்கில் நடிகர் ஆர்யாவுக்கு பலத்த காயம்

நடிகர் ஆர்யா

எனிமி படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஆர்யாவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

  • Share this:
அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்ததாக ஆரயா - விஷால் நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘எனிமி’ என்று டைட்டில் வைத்திருக்கிறது படக்குழு.

ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிக்க டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தற்போது பிரமாண்ட செட் அமைக்கட்டு டூப் இல்லாமல் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மீண்டும் இன்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் .

ஆர்யா - விஷால் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஏற்கெனவே இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்த இந்தக் கூட்டணி 9 வருடங்களுக்குப் பின் மீண்டும் ‘எனிமி’ படத்தில் இணைந்துள்ளது. மேலும் ஆர்யாவுக்கு இது 32-வது படமாகவும், விஷாலுக்கு 30-வது திரைப்படமாகவும் அமைந்திருக்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: