எம்.ஜி.ஆர் நினைவு தினம்: ‘தலைவி’ படத்தில் அரவிந்த்சாமியின் நியூ லுக் ரிலீஸ்

எம்.ஜி.ஆர் நினைவு தினம்: ‘தலைவி’ படத்தில் அரவிந்த்சாமியின் நியூ லுக் ரிலீஸ்

எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் அரவிந்த்சாமி

‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் அரவிந்த்சாமியின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. ‘தலைவி’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இத்திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்துக்காக கங்கனா ரணாவத் 22 கிலோ உடல் எடை அதிகரித்து பின் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 6-ம் தேதி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்த கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் அரவிந்த்சாமியின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கேரக்டரில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல. ஒரு பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.



சமீபத்தில் ‘தலைவி’ படத்தில் நடித்திருந்த நடிகர் சமுத்திரக்கனி தனது கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக  தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இயக்குநர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: