அரவிந்த்சாமி நடிக்கும் படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இறுதியாக 2006-ம் ஆண்டு சாசனம் படத்தில் நடித்த நடிகர் அரவிந்த் சாமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான தனி ஒருவன் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
செக்க சிவந்த வானம் படத்தை அடுத்து அரவிந்த்சாமி நடித்திருக்கும் கள்ளபார்ட், வணங்காமுடி, சதுரங்கவேட்டை 2, நரகாசூரன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
தற்போது கஜினிகாந்த் பட இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. புலனாய்வு என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமி துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார்.
மே மாதத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வி.மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— Anirudh Ravichander (@anirudhofficial) June 18, 2019
வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.