Home /News /entertainment /

’டிக்கெட் விலையை மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?’ அரவிந்த் சாமி கேள்வி

’டிக்கெட் விலையை மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?’ அரவிந்த் சாமி கேள்வி

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி

ஜனவரி 13-ம் தேதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

    தியேட்டர்களில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கு நடிகர் அரவிந்த் சாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு பெரிய நடிகரின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படும். இதனால் குறிப்பிட்ட நடிகர் மீதும், அவரது படத்தின் மீதும் கடும் விமர்சனங்கள் எழும். இதற்கெல்லாம் நடிகர்கள் குரல் கொடுக்க மாட்டார்களா? சமூக வலைதளங்களில் கேள்வி எழும்.



    இந்நிலையில் ஜனவரி 13-ம் தேதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. முதலில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் அதை ரத்து செய்து மறு அறிவிப்பு வரும் வரை 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என அறிவித்தது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் சூழலில், மறுபுறம் டிக்கெட்டுகளையும் அதிக விலைக்கு விற்க தொடங்கியுள்ளனர்.

    இது தொடர்பாக நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும் போது, டிக்கெட்டின் விலை மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என எனக்கு எப்போதுமே புரியவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Arvind Swami

    அடுத்த செய்தி