தமிழ் சினிமா வேலைநிறுத்தம் சோர்வளிக்கிறது - அரவிந்த் சாமி

news18
Updated: April 16, 2018, 7:59 PM IST
தமிழ் சினிமா வேலைநிறுத்தம் சோர்வளிக்கிறது - அரவிந்த் சாமி
அரவிந்த் சாமி - நடிகர்
news18
Updated: April 16, 2018, 7:59 PM IST
தமிழ் திரையுலகினர் நடத்திவரும் வேலைநிறுத்தம் தனக்கு சோர்வளிப்பதாக நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1- ம் தேதி முதல் தமிழ் திரைத்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகமல் ஒட்டுமொத்த திரைத்துறையும் முடங்கியுள்ளது. மேலும் திரைத்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு சார்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த்திரைத்துறையினரின் இப்பிரச்சனை குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் அரவிந்த் சாமி, வேலை நிறுத்தம் சோர்வு அளிக்கிறது. எனக்கு வேலை செய்ய வேண்டும். ஏதாவது யோசனை இருந்தால் உடனே முன்னெடுங்கள். வேலைகளை ஆரம்பிக்கவும் படப்பிடிப்புகளை நடத்தவும் உதவுங்கள் . ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதற்கு தீர்வு காணுங்கள் என கூறியுள்ளார்.

To be honest, I am kind of getting tired of this strike. Want to get back to work. Have no idea of the progress made in the terms put forward or the negotiations . I just hope everyone can get back to working soon and making movies. Thousands affected, need quick resolutions.

— arvind swami (@thearvindswami) April 14, 2018
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்