மணிரத்னம் இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அரவிந்த்சாமி ரோஜா, மறுபடியும், பாம்பே, மின்சார கனவு உள்ளிட்ட பல படங்களில் 2000-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடித்து வந்தார். பின்னர் 5 ஆண்டுகளுக்குப் பின் மறைந்த இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ‘சாசனம்’ திரைப்படத்தில் நடித்தார்.
அதன்பிறகு 2013-ம் அண்டு மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமிக்கு ‘தனி ஒருவன்’ மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து கதைக்கு தேவைப்பட்டால் பாசிட்டிவ்வாகவும், நெகட்டிவ் கேரக்டரிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
வணங்காமுடி, நரகாசூரன் உள்ளிட்ட அரவிந்த்சாமியின் ஒரு சில படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று உலக பெண் குழந்தைகள் தினத்தில் தனது மகள் அதிராவுடன் சைக்கிள் பயணம் சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அரவிந்த்சாமி. அந்த பதிவு லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
நடிகர் அரவிந்த்சாமிக்கு அதிரா என்ற மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.