Arun Vijay: திரையரங்கில் வெளியாகும் சினம் - அருண் விஜய் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

அருண் விஜய்

என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு அருண் விஜய்க்கு என மார்க்கெட் உருவானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அருண் விஜய்யின் சினம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு அருண் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களே நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றன. சமீபத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் அப்படி நேரடி ஓடிடி வெளியீட்டில் வெளியானது. அருண் விஜய் நடிப்பில் இரு படங்கள் தயாராக உள்ளன. ஒன்று, அறிவழகனின் பார்டர், இன்னொன்று ஜிஎன்ஆர் குமரவேலனின் சினம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் சினம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என வதந்தி கிளம்பியது. அதனை அருண் விஜய் மறுத்துள்ளார். நேற்று அவர் வெளியிட்ட சினம் போஸ்டரில், சினம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வதந்திக்கு அருண் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also read... Narappa: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தெலுங்கு அசுரன்...!

என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு அருண் விஜய்க்கு என மார்க்கெட் உருவானது. குற்றம் 23 படம் அதனை அதிகப்படுத்தியது. அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாஃபியா - சேப்டர் 1. கார்த்திக் நரேன் இயக்கிய இந்தப் படத்தைத் தொடர்ந்து சினம் திரைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து அறிவழகனின் பார்டர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பாக்ஸர் என்ற படத்திலும், மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள் படத்திலும் அருண் விஜய் நடித்துள்ளார். இதில் அக்னிசிறகுகள் படத்தில் அருண் விஜய்யுடன், விஜய் ஆன்டணியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: