போலியான செய்தியை குறிப்பிட்டு பெண்களை எச்சரித்த அருண் விஜய்..

போலியான செய்தியை குறிப்பிட்டு பெண்களை எச்சரித்த அருண் விஜய்..

நடிகர் அருண் விஜய்

போலியான செய்தியை சுட்டிக்காட்டி பெண்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வந்தாலும் எந்த ஒரு படமும் அவருக்கு வெற்றி பாதையை அமைத்து தரவில்லை என்று பல விமசர்னங்கள் எழுந்தது.ஆனால் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரம் அவரை புகழின் உச்சிற்கே கொண்டு சென்றது என்று கூறலாம்.

அதை தொடர்ந்து அவர் நடித்த குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம், மாஃபியா இப்படி அனைத்து படங்களுமே வெற்றி வாகைச் சூட வைத்தது.தற்போது சினம்,பாக்சர் ஆகிய இரண்டு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் பெயர் வைக்கப்பாடாத படத்தில் நடித்து வருகிறார்.அதனால் இந்த படத்திற்கு அருண் விஜய் 31 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார்.தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.இதனிடையே படத்தின் 2வது நாயகியாக நடிக்க தேர்வு நடைப்பெற்று வருவதாக இணையத்தில் செய்தி வெளியானது.இந்த செய்தி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 


இந்நிலையில் இணையத்தில் வைரலாகும் போலி விளம்பரத்தை குறிப்பிட்டு அருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதில்
‘எனது பெயரை பயன்படுத்தி போலியான விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பெண்களை குறி வைத்து பரவி வருகிறது.இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் இதுபற்றிய உண்மை தன்மையை பாருங்கள்,பாதுகாப்பாக இருங்கள்’எனக் கூறி அந்த போலியான விளம்பரங்களையும் பதிவிட்டுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published: