'மூன்று தலைமுறை நடிகர்கள்’ அருண் விஜய் வெளியிட்ட அட்டகாச படம்!

'மூன்று தலைமுறை நடிகர்கள்’ அருண் விஜய் வெளியிட்ட அட்டகாச படம்!

அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தனது அப்பா விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல நல்ல படங்களை தயாரித்து வருகிறார். அவர் அடுத்து தயாரிக்கும் படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

  சரோவ் சண்முகம் இயக்கும், இந்தப் படம் குழந்தைகளை மையமாகக் கொண்டது. சூர்யா தயாரிக்கும் இந்தப் படத்தை ஆர்.பி.பிலிம்ஸின் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்கள். ஒரு சிறுவனுக்கும் நாய்க்கும் இடையிலான எமோஷனல் பிணைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது.  பிரபல ஹீரோவுக்கு தாத்தாவாகும் நெப்போலியன்…

  இதன் படப்பிடிப்பு பூஜையுடன் டிசம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இந்தப் படத்தின் முழு கதையும் ஊட்டியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது அப்பா விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். "மூன்று தலைமுறை நடித்தது !!! அர்னவ் தனது அறிமுகத்தில் எனது அப்பாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள ஆசீர்வதிக்கப்பட்டவர். இது நம்பமுடியாத மற்றும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கிறது!” என்ற கேப்ஷனோடு அருண்விஜய் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

  இதனை அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தியும் பகிர்ந்துள்ளார். ”என்ன ஒரு அழகான இதயம் நிறைந்த பார்வை! இது உண்மையில் என் வாழ்க்கையின் சிறந்த படப்பிடிப்பு அனுபவங்களில் ஒன்று. பெரிய திரையில் சினிமாவைப் பார்ப்பது எனக்கு எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவு ஆர்வம் அதனை உருவாக்குவதிலும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஆர்த்தி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: