நடிகர் அருண் விஜய்க்கு படப்பிடிப்பின் போது விபத்து

நடிகர் அருண் விஜய் - மருத்துவமனையில் சிகிச்சை

சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது தனது வலது கையில் காயம் ஏற்பட்டு விட்டதாக நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நடிகர் அருண் விஜய் தற்போது சுவாரஸ்யமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நடிகராக திகழ்கிறார்.நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில்  அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரம் இவரின் சினிமா பயணத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

  அதையடுத்து தொடர்ந்து குற்றம் 23, தடம், மாஃபியா,செக்க சிவந்த வானம் இப்படி பல படங்கள் நடித்தார்.ஏற்கனவே சினம் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது பார்டர், பாக்சர், இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் என  பிசியாக வலம் வருகிறார்.

  அருண் விஜய்


  இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by Arun Vijay (@arunvijayno1)

  இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’ மிகப்பெரிய சண்டை காட்சி எடுக்கும் போது என்னுடைய வலதுப்புற கையில் காயம் ஏற்பட்டு விட்டது. ஷூட்டிங் முடிந்த பிறகு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

  மேலும் அருண் விஜய் மற்றும் அவரது மகன் நடித்துள்ள ’ஓ மை டாக்’ திரைப்படம் அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: