புதிய சீரியலில் இணைந்த பிரபல சின்னத்திரை நடிகர் அருண்குமார் ராஜன்

சின்னத்திரை நடிகர் அருண்குமார் ராஜன்

சின்னத்திரை நடிகர் அருண்குமார் ராஜன் சமீபத்தில் ராஜ் டிவியில் துவக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் ஆனந்தி சீரியலில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

  • Share this:
சின்னத்திரை நடிகர் அருண்குமார் ராஜன் சமீபத்தில் ராஜ் டிவியில் துவக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் ஆனந்தி சீரியலில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். தனது சமூக ஊடகதில் இது தொடர்பான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் அருண்குமார் ராஜன். அருண் குமார் ராஜன் ஒரு சின்னத்திரை நடிகராவார். இளவரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து அழகி, சந்திரலேகா, வாணி ராணி, கல்யாண பரிசு, இளவரசி, அழகி போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடிகர் அருண்குமார் ராஜன் நடித்துள்ளார். இவரது சின்னத்திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய சீரியல் ராதிகாவுடன் இணைந்து நடித்த வாணி ராணி சீரியல் தான். இந்த சீரியலில் சூரிய நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் தெரிந்த பிரபல சின்னத்திரை நடிகராக பார்வையாளர்களை நடிகர் அருண்குமார் ராஜன் கவர்ந்தார்.

ALSO READ : ’விஜய்யுடன் டான்ஸ் ஆடும் போது கர்ப்பமாக இருந்தேன்’ - நடிகை ஓபன் டாக்

தற்போது பூவே உனக்காக சீரியலில் செல்வம் மற்றும் சந்திரலேகாவில் சபரிநாதன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அருண்குமார் ராஜன். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை என்றாலும் தற்போது சென்னையிலேயே வசித்து வருகிறார். இவர் தனது ஆரம்ப கல்வியை பாரத் சீரியர் ஹையர் செகண்டரி பள்ளியிலும் உயர் கல்வியை சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார். சமீபத்தில் ராஜ் டிவியில் ஆனந்தி என்ற மெகா சீரியல் கீதா டெலி மீடியா தயாரிப்பில் துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை சாய் மருது என்பவர் இயக்கி வருகிறார்.

 
இதில் நிரோஷா, விசித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கதைப்படி நிரோஷா ராதாவின் மகன் டாக்டர் மனோஜ் கதாபாத்திரத்தில் அருண்குமார் ராஜன் நடிக்கிறார். இவர் இடம் பெறும் எபிசோட்கள் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டுள்ளன. கதையின்படி அருண்குமார் ராஜன் ஒரு வேதனையான கடந்த காலத்துடன் கூடிய ஒரு நல்ல மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ALSO READ : பட வேலைகளை நிறுத்தச் சொன்ன விஜய்... காரணம் என்ன?

நடிகர் அருண்குமார் ராஜனின் அறிமுகம் ஆனந்தி சீரியலில் மேலும் திருப்பங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆனந்தி சீரியலின் செட்டில் இருந்து கொண்டு “Sweet n short live from Dr.Manoj"என்ற தலைப்பில் தனது இன்ஸ்டா மூலம் லைவ் வந்தார் நடிகர் அருண்குமார் ராஜன். ராஜ் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆனந்தி சீரியலை பார்க்கத் தவறாதீர்கள் என்றும் குறிப்பிட்டார். லைவில் இருந்த அருண்குமார் ராஜன் ரசிகர்களிடம் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
ஆனந்தி சீரியலில் அருண்குமார் ராஜனை தவிர அவினாஷ் அசோக், உயிரே புகழ் ஐஸ்வர்யா சாலிமாத், ரம்யா நிவாஸ், சாய் லட்சுமி, சத்யா, ஜெயராம், அசோகன், கிரி மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: