நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்கு லோகேஷ் கனகராஜ் உருக்கமான இரங்கல்

நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்கு லோகேஷ் கனகராஜ் உருக்கமான இரங்கல்

அருண் அலெக்ஸாண்டர் | லோகேஷ் கனகராஜ்

நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னையைச் சேர்ந்த அருண் அலெக்ஸாண்டர் பல வருடங்களாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்தார். உலக புகழ் பெற்ற அவர்தார் திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களுக்கு குரல் கொடுத்திருக்கும் இவர் பாலிவுட் நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

டப்பிங் பேசுவது மட்டுமல்லாது 2016-ம் ஆண்டில் இருந்து நடிகராக அறிமுகமான இவர், மாநகரம்', 'கோலமாவு கோகிலா', 'பிகில்', 'கைதி', விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அருண் அலெக்ஸாண்டர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அருண் அலெக்ஸாண்டரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்கு மாற்றே கிடையாது. என்றுமே என் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள்". என்று உருக்கமாக கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களிலுமே நடித்திருக்கும் அருண் அலெக்ஸாண்டர் ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதியுடன் மட்டுமே தான் நடித்திருப்பதாகவும், விஜய்யுடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தான் என்றும் பேட்டி ஒன்றில் அருண் அலெக்ஸாண்டர் தெரிவித்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘டாக்டர்’ படத்திலும் அருண் அலெக்ஸாண்டர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: