மரகத நாணயம் இரண்டாம் பாகம் - இயக்குனரின் முக்கிய அறிவிப்பு!

மரகத நாணயம்

லாக் டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டதும் சத்யஜோதி பிலிம்ஸுக்காக சரவணன் இயக்கப் போகும் படத்தின் வேலைகள் தொடங்க உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
மரகத நாயணம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கயிருப்பதாக ஏஆர்கே சரவணன் கூறியுள்ளார்.

2017 இல் மரகத நாயணம் திரைப்படம் வெளியானது. காமெடி பேண்டஸி திரைப்படமாக இதனை இயக்குனர் ஏஆர்கே சரவணன் உருவாக்கியிருந்தார். ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், முனிஷ்காந்த், கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். செய்தித்தாளில் வந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்ததாக சரவணன் கூறியிருந்தார். படம் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதன் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஆக்செஸ் ஃபிலிம்ஸ் டில்லிபாபுவிடம் கூறியிருக்கிறார் சரவணன். கதை பிடித்து, இரண்டாம் பாகத்தை தயாரிக்க அவர் முன்வந்துள்ளார். சமூகவலைதளத்தில் இதனை பகிர்ந்திருக்கும் சரவணன், அதற்கு முன்பாக சத்யஜோதி ஃபிலிம்ஸுக்காக ஒரு படம் இயக்கயிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also read... நாயை மகன் என்று அறிமுகப்படுத்திய வரலட்சுமி - 'ஷாக்'கான ரசிகர்கள்

கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. புதிதாக பதவியேற்றிருக்கும் அரசின் சீரிய முயற்சியால் பதினைந்து தினங்களுக்குள் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, படப்பிடிப்புகள் அனுமதிக்கப்படும் என திரைத்துறையின் நம்புகின்றனர்

லாக் டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டதும் சத்யஜோதி பிலிம்ஸுக்காக சரவணன் இயக்கப் போகும் படத்தின் வேலைகள் தொடங்க உள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: