ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Survivor தொகுப்பாளராக களமிறங்கும் ஆக்ஷன் கிங் - புரோமோ வெளியீடு!

Survivor தொகுப்பாளராக களமிறங்கும் ஆக்ஷன் கிங் - புரோமோ வெளியீடு!

நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன்

அருண் விஜய், வனிதா விஜயக்குமார், நடிகை விஜயலட்சுமி, ஸ்ரீரெட்டி, நந்தா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆக்ஷன் கிங் அர்ஜூன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளார்.

விஜய் டீவியில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் ஷோவின் 5 வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக உலகளவில் ஹிட்டான நிகழ்ச்சியான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சி களமிறக்கியுள்ளது. ஒரு வீட்டிற்குள் போட்டியாளர்களை அடைத்து வைத்து, அங்கு நடைபெறும் டாஸ்குகளில் வெற்றி பெற்று கடைசி வரை இருப்பவர்கள் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றியாளர்களாக பிக்பாஸில் அறிவிக்கப்படுகின்றனர். ஆனால், ’சர்வைவர்’ ரியாலிட்டி ஷோ முற்றிலும் வேறானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் தனித் தீவு ஒன்றில் விடப்படுவார்கள். அங்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் அங்கிருக்கும் பொருட்களை வைத்து அவர்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கிடையே டாஸ்குகளும் இருக்கும். மன வலிமை, உடல் வலிமை சோதிக்கும் வகையில் இருக்கும் அந்த டாஸ்குகளில் வெற்றி பெற்று இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். வித்தியாசமான மற்றும் மிரட்சியான இருக்கப்போகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு ஏற்ப தொகுப்பாளரை தேடிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் உடைய ஆக்ஷன் கிங் அர்ஜூனை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கான புரோமோவை அதிகாரப்பூர்வமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் முத்திரைப்பதித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் ‘சர்வைவர்’ நிகழ்சிக்கான புரோமோவை வெளியிட்டு, இந்த நிகழ்ச்சி வெற்றியடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். புரோமோ சூப்பராக இருக்கிறது. சர்வைவர் நிகழ்ச்சி மீதான பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also read... கௌதமின் கிட்டார் கம்பி மேலே நின்று காப்பி அடிக்கப்பட்ட கதையா?

இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்களின் பெயர்களில் அருண் விஜய், வனிதா விஜயக்குமார், நடிகை விஜயலட்சுமி, ஸ்ரீரெட்டி, நந்தா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. மேலும், வி.ஜே பார்வதி, இந்தரஜா சங்கர், சன்ஜா சிங், ஜான் விஜய், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள படபிடிப்புகள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக படக்குழுவினர் விரைவில் தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளனர். நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே தங்கியிருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பானால் பிக்பாஸ் ஷோவுக்கு கடும் போட்டியாக சர்வைவர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பிக்பாஸ் vs சர்வைவர், கமல் Vs அர்ஜூன் என்ற போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.

First published:

Tags: Actor Arjun