அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் கடந்த 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. உலக அளவில் இந்தப் படம் இதுவரை 441 மில்லியன் டாலர்களையும், இந்தியாவில் இந்தப் படம் இதுவரை ரூ.129 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது.
இந்த நிலையில் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜேம்ஸ் கேமரூனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த பதிவில், ''ஆர்ய பிராமண அமைப்பின் கருத்துக்களை உலகுக்கு சொன்ன இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது.
அவதார் - சமஸ்கிருத பெயர்
நீலம் - கிருஷ்ணரின் வண்ணம்
நெற்றி - நாமம்
டிராகன் - கருடன்
திமிங்கலம் - மச்ச அவதாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க| 'உப்பெனா' பட விவகாரம்: விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து!
IMK condemns James Cameron for spreading Arya Brahminical Patriarchy thoughts to the world.
Avatar - Sankrit name
Blue - color of Krishna
Forehead - Thiruman(namam)
Dragon - Garuda
Whale - Matchi Avatar
Elixir - Amrut pic.twitter.com/cPqdxzqaS6
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) December 19, 2022
இந்து மக்கள் கட்சியின் இப்பதிவுக்கு ரசிகர்கள் இது ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரியுமா என கமெண்ட் செய்துவருகிறார்கள். அவதார் பட முதல் பாகம் வெளியான போதே அவதார் என்ற பெயர் சமஸ்கிருத பெயர் என்று விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவதார் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெரிய படங்கள் வெளியாகததால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arjun Sampath, Avatar, James Cameron