• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இளம் வயது ஹீரோவை இரண்டாவது திருமணம் செய்யும் மலைக்கா?

இளம் வயது ஹீரோவை இரண்டாவது திருமணம் செய்யும் மலைக்கா?

நடிகை மலைக்கா அரோரா

நடிகை மலைக்கா அரோரா

நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாலிவுட் படங்களில் நடித்து வரும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருக்கும், நடிகை மலைக்கா அரோராவுக்கும் இடையே காதல் என்று பல காலமாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அந்த பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா, இயக்குநர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தக்க தைய்ய தைய்யா’ பாடலில் நடனமாடியவர். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயதுடைய மகன் இருக்கிறார்.



    இவர்கள் வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். விவாகரத்து கேட்டு மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சில் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார்.



    தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் இவரும் நடிகர் அர்ஜுன் கபூரும் ஒன்றாக பல்வேறு விழாக்களுக்குச் செல்வதால் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், “அவர்கள் காதலித்து வருவது உண்மைதான். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்” என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். மலைக்காவுக்கு வயது 42, அர்ஜுன் கபூருக்கு 33 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: