• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வசந்தபாலனின் அடுத்தப் படத்தில் ஹீரோவாக 'மாஸ்டர்' வில்லன்?

வசந்தபாலனின் அடுத்தப் படத்தில் ஹீரோவாக 'மாஸ்டர்' வில்லன்?

வசந்தபாலன்

வசந்தபாலன்

இவர் இயக்கிய 'வெயில்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

  • Share this:
    இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படைப்புகளை உருவாக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். யதார்த்த களத்தில் அமைந்த இவரது படங்கள் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய 'வெயில்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.

    தற்போது ‘ஜெயில்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் வசந்தபாலன்.  ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    இந்நிலையில், தனது அடுத்தப் படத்தில் பிஸியாக இருக்கும்  வசந்தபாலன், அதற்கு ஹீரோவாக விஜய் படத்தின் வில்லனை டிக் செய்திருக்கிறாராம். பாலிவுட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தி லிஃப்ட் பாய்' என்கிற படத்தை அவர், தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கைதி, அந்தகாரம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: